பொது செய்தி

இந்தியா

நாடு திரும்ப காத்திருக்கும் பெண் பயங்கரவாதிகள்: மத்திய அரசு தயக்கம்

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (50)
Share
Advertisement
புதுடில்லி-ஆப்கனுக்கு சென்ற கேரளாவைச் சேர்ந்த, நான்கு ஐ.எஸ்., பெண் பயங்கரவாதிகள், தாயகம் திரும்புவதற்காக மத்திய அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.கேரளாவைச் சேர்ந்த நான்கு பெண்கள் உட்பட, 21 பேர், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர, கடந்த 2016ல், அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கு சென்றனர்.அங்கு, ஐ.எஸ்., அமைப்பில் இணைந்து, பல்வேறு தாக்குதல்களை நடத்தினர். ஆப்கன்

புதுடில்லி-ஆப்கனுக்கு சென்ற கேரளாவைச் சேர்ந்த, நான்கு ஐ.எஸ்., பெண் பயங்கரவாதிகள், தாயகம் திரும்புவதற்காக மத்திய அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.latest tamil news


கேரளாவைச் சேர்ந்த நான்கு பெண்கள் உட்பட, 21 பேர், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர, கடந்த 2016ல், அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கு சென்றனர்.அங்கு, ஐ.எஸ்., அமைப்பில் இணைந்து, பல்வேறு தாக்குதல்களை நடத்தினர். ஆப்கன் படையினரின் பதில் தாக்குதல்களில், இந்த பெண்களின் கணவர்கள் இறந்துவிட்டனர். இதற்கிடையே, ஆப்கன் அரசு, 13 நாடுகளைச் சேர்ந்த, 408 ஐ.எஸ்., பயங்கரவாதிகளை கைது செய்தது. இதில், இந்த நான்கு பெண்களும் அடங்குவர்.


latest tamil news


இவர்கள், ஆப்கன் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், இந்த பயங்கரவாதிகளை திருப்பியனுப்ப, சம்பந்தப்பட்ட நாடுகளுடன், ஆப்கன் அரசு பேசி வருகிறது. எனினும், இந்த நான்கு பெண் பயங்கரவாதிகளை தாயகத்துக்கு திரும்ப அழைப்பதில், மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது. பயங்கரவாதிகள் என்பதால், அவர்கள் இங்கு வந்து தாக்குதல்களில் ஈடுபடலாம் என, மத்திய அரசு சந்தேகிக்கிறது.அதனால், தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ள நான்கு ஐ.எஸ்., பெண் பயங்கரவாதிகளும், மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
16-ஜூன்-202115:56:30 IST Report Abuse
mathimandhiri இது போன்ற விஷயங்களில் சைக்கோ, குருமா, கீரை மணி, சைமன் போன்ற நாட்டுக்குழைக்கும் தலை சிறந்த தேச பக்தர்களையும், பப்பு போன்ற அரசியல் சாணக்கியர்களையும் கலந்தாலோசித்து அவர்கள் சொல்வதை அப்படியே செய்ய வேண்டும்//////. மேற்கு வங்க அரசில் அவர்களுக்கு டாப் போஸ்ட் கூட குடுக்க முன் வரலாம். ////// மேற்கு வங்கம் தனி நாடாவதற்கு அவர்களின் பங்களிப்பு தேவைப் படலாம்.
Rate this:
Cancel
Yesappa - Bangalore,இந்தியா
14-ஜூன்-202116:33:47 IST Report Abuse
Yesappa எங்க வந்து வத வதன்னு புள்ள பெக்க போவுது..சனியன் அத அங்க செஞ்சிட்டு போவுது..
Rate this:
Cancel
tata sumo -  ( Posted via: Dinamalar Android App )
13-ஜூன்-202123:25:38 IST Report Abuse
tata sumo all stupids commenting here will go to eat biriyani in terrorist religion shops, if you people all have brain dont buy things in these stupids shops. jai hind
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X