நாடு திரும்ப காத்திருக்கும் பெண் பயங்கரவாதிகள்: மத்திய அரசு தயக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நாடு திரும்ப காத்திருக்கும் பெண் பயங்கரவாதிகள்: மத்திய அரசு தயக்கம்

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (50)
Share
புதுடில்லி-ஆப்கனுக்கு சென்ற கேரளாவைச் சேர்ந்த, நான்கு ஐ.எஸ்., பெண் பயங்கரவாதிகள், தாயகம் திரும்புவதற்காக மத்திய அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.கேரளாவைச் சேர்ந்த நான்கு பெண்கள் உட்பட, 21 பேர், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர, கடந்த 2016ல், அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கு சென்றனர்.அங்கு, ஐ.எஸ்., அமைப்பில் இணைந்து, பல்வேறு தாக்குதல்களை நடத்தினர். ஆப்கன்

புதுடில்லி-ஆப்கனுக்கு சென்ற கேரளாவைச் சேர்ந்த, நான்கு ஐ.எஸ்., பெண் பயங்கரவாதிகள், தாயகம் திரும்புவதற்காக மத்திய அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.



latest tamil news


கேரளாவைச் சேர்ந்த நான்கு பெண்கள் உட்பட, 21 பேர், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர, கடந்த 2016ல், அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கு சென்றனர்.அங்கு, ஐ.எஸ்., அமைப்பில் இணைந்து, பல்வேறு தாக்குதல்களை நடத்தினர். ஆப்கன் படையினரின் பதில் தாக்குதல்களில், இந்த பெண்களின் கணவர்கள் இறந்துவிட்டனர். இதற்கிடையே, ஆப்கன் அரசு, 13 நாடுகளைச் சேர்ந்த, 408 ஐ.எஸ்., பயங்கரவாதிகளை கைது செய்தது. இதில், இந்த நான்கு பெண்களும் அடங்குவர்.


latest tamil news


இவர்கள், ஆப்கன் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், இந்த பயங்கரவாதிகளை திருப்பியனுப்ப, சம்பந்தப்பட்ட நாடுகளுடன், ஆப்கன் அரசு பேசி வருகிறது. எனினும், இந்த நான்கு பெண் பயங்கரவாதிகளை தாயகத்துக்கு திரும்ப அழைப்பதில், மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது. பயங்கரவாதிகள் என்பதால், அவர்கள் இங்கு வந்து தாக்குதல்களில் ஈடுபடலாம் என, மத்திய அரசு சந்தேகிக்கிறது.அதனால், தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ள நான்கு ஐ.எஸ்., பெண் பயங்கரவாதிகளும், மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X