பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: சும்மா 'உதார்' விடாதீர்!

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (130)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :ச.பிரசன்னா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:தி.மு.க., தலைமையிலான மாநில அரசு, கொரோனாவை தடுப்பதை விட, அப்பழியை மத்திய அரசின் மேல் போட வேண்டும் என்பதிலேயே அக்கறை காட்டுகிறது.மத்திய அரசு மற்றும் முந்தைய அ.தி.மு.க., அரசு, ஊரடங்கு போட்ட போதெல்லாம், 'ஏழை மக்கள்
ithu, ungal ,idam, இது, உங்கள், இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :



ச.பிரசன்னா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

தி.மு.க., தலைமையிலான மாநில அரசு, கொரோனாவை தடுப்பதை விட, அப்பழியை மத்திய அரசின் மேல் போட வேண்டும் என்பதிலேயே அக்கறை காட்டுகிறது.மத்திய அரசு மற்றும் முந்தைய அ.தி.மு.க., அரசு, ஊரடங்கு போட்ட போதெல்லாம், 'ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர்' என, தி.மு.க.,வினர் பொங்கினர்.

சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்று, ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற இரண்டாம் நாளே, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். அதிலும் அரை, முக்கால், முழு ஊரடங்கு என, ஏகப்பட்ட உருமாற்றங்கள் நடந்தன.அ.தி.மு.க., அரசு, 'இ- - பாஸ்' முறையை அமல்படுத்தியபோது, 'கமிஷன் அடிக்கின்றனர்' என, ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். இவர் முதல்வரானதும், மாவட்டம் தாண்டி செல்ல, இ - -பாஸ் அனுமதி வாங்க வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கிறார்.


latest tamil news


இதை விட கொடுமை... 'தடுப்பூசி போடுங்கள்' என, மத்திய அரசு விழிப்புணர்வு ஏற்படுத்திய போது, தி.மு.க., - எம்.பி., தயாநிதி, 'முதலில் பிரதமரை தடுப்பூசி போட்டுக் கொள்ள சொல்லுங்கள்' என, கேலி பேசினார்.அதே தி.மு.க., இன்று, 'அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்' என, கெஞ்சுகிறது.'தடுப்பூசியை நாங்களே வாங்கிக் கொள்கிறோம்' என வீரம் பேசி, விளம்பரம் செய்த முதல்வர் ஸ்டாலின், உலகளாவிய டெண்டரில் ஒருத்தரும் வரவில்லை என்றதும், மத்திய அரசு கை கழுவுகிறது என அழுகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (130)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஜூன்-202122:28:45 IST Report Abuse
Pugazh V நன்றி blocked user. உங்களுக்கு கூடப் புரிந்து விட்டது.
Rate this:
Cancel
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
13-ஜூன்-202121:59:38 IST Report Abuse
Sathyanarayanan Subramanian என்னதான் நடக்கிறது இந்த துக்ளக் ஆட்சியில்
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
13-ஜூன்-202120:21:55 IST Report Abuse
Narayanan திமுக அமைச்சரவையில் பெண்களை சேர்க்க துப்பில்லை கோவில்களில் அர்ச்சகராக வைப்பார்களாம் ? அது என்ன அமைச்சர்பதவியா கண்டவர்களும் அமர ? கோவில் அர்ச்சகர் சாதராணம் இல்லை . அதற்கு என்று ஒரு தகுதி இருக்கு . சேகருக்கு இருந்தாலும் இப்படி ஒருபதவி வேண்டாம்தான் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X