பொது செய்தி

இந்தியா

அமெரிக்க நாளிதழுக்கு மத்திய அரசு கண்டனம்

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
புதுடில்லி-'இந்தியாவில் கொரோனாவுக்கு, 42 லட்சம் பேர் பலியாகிவிட்டனர்' என, செய்தி வெளியிட்ட, அமெரிக்க நாளிதழுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்சில், 'இந்தியாவில் கொரோனாவுக்கு மூன்று லட்சம் பேர் பலியாகியுள்ளதாக, அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது. உண்மையில், 42 லட்சம் பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பலி

புதுடில்லி-'இந்தியாவில் கொரோனாவுக்கு, 42 லட்சம் பேர் பலியாகிவிட்டனர்' என, செய்தி வெளியிட்ட, அமெரிக்க நாளிதழுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.latest tamil news


அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்சில், 'இந்தியாவில் கொரோனாவுக்கு மூன்று லட்சம் பேர் பலியாகியுள்ளதாக, அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது. உண்மையில், 42 லட்சம் பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பலி எண்ணிக்கையை, இந்திய அரசு மூடி மறைக்கிறது' என, செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்தும், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வழிகாட்டுதல்களின் படி, கொரோனாவால் இறந்தவர்களை, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பதிவு செய்து வருகின்றன. மாவட்ட வாரியாக பலி எண்ணிக்கை தினமும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.


latest tamil news


ஆனால், இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில், கொரோனாவுக்கு, 42 லட்சம் பேர் இறந்துவிட்டதாக எந்த ஆதாரமும் இன்றி, கற்பனையின் அடிப்படையில் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு இந்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
13-ஜூன்-202117:09:57 IST Report Abuse
DVRR ஆமாம் 40 லட்சம் பேர் இறந்து விட்டனர்??? அதனால் உனக்கு என்ன???? அவர்கள் குடும்பத்திற்கு நீ என்ன பணம், உணவு, வேலை வீடு கொடுத்து உதவப்போகின்றாயா???இல்லை அல்லவா???? இப்படி எல்லாம் தப்பு தப்பாக தகவல் கொடுத்து மோடி அரசை மக்கள் வெறுத்து ஒதுக்க வேண்டும் என்ற தொனியில் உளறவேண்டாம்
Rate this:
Cancel
V Gopalan - Bangalore ,இந்தியா
13-ஜூன்-202116:30:29 IST Report Abuse
V Gopalan How about their story. Lloyd floyd:s neck was squeezed and pulitzer award was conferred who photographed During Trump period how many lost their lives, let them compare. In the name of freedom of speech/expression, any one can vomit without analysing the truth. It is because we have enemy within our country who go on blabber like one person who spoke about the Kashmir issue. None else our own opposition party/ties are enough to keep our Nation in an awkward position, such people must be booked under sedition act but court will say no evidence. Inspite of Natural resources, man power tech know how et all, our country could not achieve development at par with China because of freedom of speech/expression, democracy etc.
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
13-ஜூன்-202115:40:11 IST Report Abuse
Elango கண்டிப்பாக எல்லா அரசுகளும் பலி எண்ணிக்கை குறைவாக காட்டுகிறார்கள்... எனது மருத்துவ நண்பர்கள் சொல்வது வட நாட்டில் மறைத்தல் அதிகம், தென் மாநிலங்களில் மக்கள் சற்று குறைவு அதனால் under reporting சற்று குறைவு அவ்வளவு தான் வித்தியாசம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X