சீனாவில் தடுப்பு மருந்து ஸ்பிரே..!

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
பெய்ஜிங்: உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து பல்வேறு விதமான தடுப்பு மருந்துகளை பல நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு செலுத்தி வருகின்றன. தடுப்பு மருந்துகளின் தரத்தை மேம்படுத்த ஆராய்ச்சி தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது.அமெரிக்க தடுப்பு மருந்துகளான பைசர்-பயான்டெக் தடுப்பு மருந்தில் இருந்து ரஷ்ய தடுப்பு மருந்தான ஸ்பூட்நிக்-5 வரை

பெய்ஜிங்: உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து பல்வேறு விதமான தடுப்பு மருந்துகளை பல நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு செலுத்தி வருகின்றன. தடுப்பு மருந்துகளின் தரத்தை மேம்படுத்த ஆராய்ச்சி தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது.



latest tamil news


அமெரிக்க தடுப்பு மருந்துகளான பைசர்-பயான்டெக் தடுப்பு மருந்தில் இருந்து ரஷ்ய தடுப்பு மருந்தான ஸ்பூட்நிக்-5 வரை அனைத்தும் உருமாறிவரும் கொரோனா வைரஸை சமாளிக்க ஏற்ப விஞ்ஞான வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்நிலையில் சீனா நாசி துவாரத்தில் அடிக்கும் ஸ்பிரே வடிவில் ஓர் புதிய திரவநிலை தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. இது பல நாடுகளை வியக்கச் செய்துள்ளது. வலி நிவாரண ஸ்பிரேபோல இதனை நாசி துவாரத்தில் அனைவரும் அடித்துக் கொள்ளலாம்.


latest tamil news


இந்த திரவ தடுப்பு மருந்தை சுவாசிப்பதன் மூலமாக அது நுரையீரலுக்குள் சென்று கொரோனா வைரஸ் தாக்கத்தை நுரையீரலில் குறைக்கிறது. எட்டரை கோடி தடுப்பு மருந்துகள் சீனாவின் அனைத்து மாகாணங்களுக்கும் தற்போது விநியோகிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த தடுப்பு மருந்து ஸ்பிரே அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

இந்த திரவநிலை தடுப்பு மருந்து இன்னும் சோதனை நிலையிலேயே உள்ளது. இது உண்மையாகவே பலன் அளிக்குமானால் இதனை பொது மக்களுக்கு அளிக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
13-ஜூன்-202112:48:55 IST Report Abuse
Ramesh Sargam இந்த சீனாக்காரன் எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றி தன்வசம் இழுக்க பார்க்கிறான் பாருங்கள். வைரஸை கண்டுபிடித்து உலக நாடுகளுக்கு பரப்பிவிட்டு, பிறகு அது பரவாமல் இருக்க தடுப்பூசியை கண்டுபிடித்தான். அதை மற்ற நாடுகளுக்கு அனுப்பினான். இப்ப தடுப்பு மருந்து ஸ்பிரே கண்டுபிடித்து அதையும் உலக சந்தையில் விற்று பணம் சம்பாதிக்க பார்க்கிறான். சரியான cunning China...
Rate this:
Cancel
Somiah M - chennai,இந்தியா
13-ஜூன்-202111:23:45 IST Report Abuse
Somiah M சீனாவின் எந்த செயலையும் உடனடியாக நம்ப முடியாது .
Rate this:
Cancel
Puratchi Thondan (a) Senathipathy - Chennai,இந்தியா
13-ஜூன்-202111:17:54 IST Report Abuse
Puratchi Thondan (a) Senathipathy சப்ப மூக்கனோடது வேண்டவே வேண்டாம்... மீறி வாங்கி அடித்தால்... என்ன ஜனங்க எல்லாம் பொத்து பொத்துனு விழுறாங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X