அரசியல் செய்தி

தமிழ்நாடு

மதுக்கடைகள் திறந்தால் கொரோனா பரவல் அதிகரிக்கும் - ஓ.பி.எஸ்.,

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
சென்னை: டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவை, தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை: கடந்த ஆண்டு மே முதல் வாரத்தில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 3,000 ஆக இருந்த போது, சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில், 2020 மே, 7 முதல் மதுபான கடைகள் திறக்கப்படும் என,
tasmac, stalin, ops, open, டாஸ்மாக், ஸ்டாலின், ஓபிஎஸ், திறப்பு, வாபஸ்

சென்னை: டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவை, தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை: கடந்த ஆண்டு மே முதல் வாரத்தில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 3,000 ஆக இருந்த போது, சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில், 2020 மே, 7 முதல் மதுபான கடைகள் திறக்கப்படும் என, அ.தி.மு.க., அரசு அறிவித்தது.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., சார்பில், அவரவர் வீடு முன் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வரும், தன் வீட்டின் முன் கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.'இது, கொரோனா பரவலை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும். மதுபான சில்லரை விற்பனை கடைகளை திறக்கக்கூடாது' என, ஸ்டாலின் கூறியிருந்தார்.

அவர் தான் தற்போது முதல்வர். நேற்று முன்தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 15 ஆயிரத்து, 759; உயிரிழப்புகள், 378 என்ற சூழ்நிலையில், 27 மாவட்டங்களில், டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதிக்கப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார். இது, முறைதானா என்பதை, முதல்வர் சிந்தித்து பார்க்க வேண்டும்.இந்த அறிவிப்பை பார்க்கும் போது, சமயத்திற்கு தகுந்தாற்போல, ஒரு நிலைப்பாட்டை தி.மு.க., எடுக்கிறதோ என்ற எண்ணம், அனைவர் மத்தியிலும் மேலோங்கி நிற்கிறது.


latest tamil news


அரசு வருவாயை விட, மனித உயிர் முக்கியமானது என்பதன் அடிப்படையில், நாளை முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்ற முடிவை, அரசு திரும்பப் பெற வேண்டும்.பெட்ரோல் விலை தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி, லிட்டருக்கு பெட்ரோல் விலையை ஐந்து ரூபாய்; டீசல் விலையை நான்கு ரூபாய் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், பெட்ரோல், டீசலை, ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
14-ஜூன்-202107:02:31 IST Report Abuse
g.s,rajan இளைய சமுதாயம் கைகளில் மது பாட்டில் ,மறைந்த மாமேதை அப்துல் கலாம் அவர்களின் இந்தியா ஒரு வல்லரசு என்ற கனவு நனவாக இன்னும் எத்தனை கால ஆகுமோ தெரியல ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Cancel
TamilReader - Dindigul,யூ.எஸ்.ஏ
13-ஜூன்-202117:57:55 IST Report Abuse
TamilReader I agreed. But your goverment also did the samething and never shutdown the TASMAC stores Don't play dirty politics. ADMK goverment total failed to control the virus. From January to April, only less than 10 lakhs vaccines administered and vasted more than 2 lakhs vaccines
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
13-ஜூன்-202115:31:08 IST Report Abuse
Pugazh V கேரளா வாங்க.. கெத்தா நாங்க போய் மது வாங்குவதையும் சக கேரளியர்கள் வாங்கறதையும் பார்க்கலாம். இங்கே யாரும் ஒளிந்து கொண்டு குடிப்பதில்லை
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli,வலிமையான இந்திய கண்டம் ,இந்தியா
19-ஜூன்-202108:42:44 IST Report Abuse
NicoleThomsonகுடிக்குறதையும் கெடுப்பதையும் நாம் ஒன்றாகவே பாவிப்பது வேதனை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X