அமெரிக்க மீனவரை விழுங்கித் துப்பிய திமிங்கலம்..!

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
மெசச்சுசஸ்ட்: அமெரிக்காவின் மெசச்சுசஸ்ட் கடற்கரை அருகே அனைவரையும் புருவம் உயர்த்த வைக்கும் ஒரு வித்தியாசமான சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அமெரிக்காவில் குழந்தைகளுக்கான கதை ஒன்று உண்டு. பினோஜியோ என்கிற இந்த கதையில் மீனவர் ஒருவர் ஒருவரை பிரமாண்ட திமிங்கலம் ஒன்று விழுங்கி பின்னர் துப்பிவிடும். இக்கதை தற்போது உண்மை

மெசச்சுசஸ்ட்: அமெரிக்காவின் மெசச்சுசஸ்ட் கடற்கரை அருகே அனைவரையும் புருவம் உயர்த்த வைக்கும் ஒரு வித்தியாசமான சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.latest tamil news


அமெரிக்காவில் குழந்தைகளுக்கான கதை ஒன்று உண்டு. பினோஜியோ என்கிற இந்த கதையில் மீனவர் ஒருவர் ஒருவரை பிரமாண்ட திமிங்கலம் ஒன்று விழுங்கி பின்னர் துப்பிவிடும். இக்கதை தற்போது உண்மை சம்பவமாகியுள்ளது.

மைக்கேல் பக்காடு என்கிற அமெரிக்க மீனவர் லாப்ஸ்டர் எனப்படும் கடலின் ஆழத்தில் இருக்கும் நண்டை பிடிப்பதற்காக கடலில் குதித்துள்ளார். 35 அடி ஆழத்திற்குச் சென்று நீந்திக் கொண்டிருந்த அவரை ஹம்பக் வகை திமிங்கலம் ஒன்று எதிர்பாராவிதமாக விழுங்கியது.

30 விநாடிகள் திமிங்கலத்தின் இருட்டடித்த வாயில் என்ன செய்வது என்று தெரியாமல் அவர் நீந்திக் கொண்டிருந்த நிலையில் தனக்கே உரித்தான பாணியில் கடலுக்குமேலே எகிறிகுதித்த திமிங்கலம், அவரை காரித் துப்பியது. துப்பிய வேகத்தில் பறந்துபோய் கடலின் மேற்பரப்பில் விழுந்த மைக்கேல், பின்னர் கரைக்கு வந்து சேர்ந்தார்.


latest tamil news


இதனால் அவருக்கு எலும்பு முறிவோ, பெரிய காயங்களோ ஏற்படவில்லை. ஆங்காங்கே சிறிய காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மெசச்சுசஸ்ட் திமிங்கல ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகையில் பொதுவாக திமிங்கலங்கள் வாயை நன்றாக திறந்தபடி நேர்கோட்டில் சென்றுகொண்டிருக்கும். குழுவாக வரும் மீன்களை அப்படியே லபக் என்று கபளீகரம் செய்துவிடும்.

இவ்வாறு திமிங்கலம் தனது உணவைத் தேடும். திமிங்கலம் சென்ற நேர்கோட்டில் மைக்கேல் சிக்கிக்கொண்டார். பிறகு திமிங்கலம் என்ன நினைத்ததோ, அதிர்ஷ்டவசமாக அவரைத் துப்பிவிட்டது எனக் கூறியுள்ளனர். இச்செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
14-ஜூன்-202114:32:06 IST Report Abuse
ponssasi PTR ஆல் சட்டம் கூட போடமுடியுமா?
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
13-ஜூன்-202114:38:35 IST Report Abuse
Vena Suna திமிங்கலம் மனிதன் கடல் ஆழத்தில் மாட்டிக் கொண்டான் என நினைத்து அவனை கப்பலில் இருக்கும் மற்ற மனிதர்களுடன் சேர்த்தது....அதற்கு என்ன ஒரு நல்ல புத்தி...
Rate this:
Cancel
Mahalingam Laxman - Chapel Hill,யூ.எஸ்.ஏ
13-ஜூன்-202111:56:33 IST Report Abuse
Mahalingam Laxman மிக அத்ருஷ்டசாலி. எமலோகம் சென்று திரும்பியிருக்கிறார். கடவுள் காப்பாற்றியிருக்கிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X