பொது செய்தி

இந்தியா

மோனோ குளோனல் எதிர்ப்பு சக்தி கலவை தடுப்பூசிக்கு மாற்றாகுமா?

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஐதராபாத்: கடந்தாண்டு அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டபோது கொடுக்கப்பட்ட மோனோ கிளோனல் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து கலவை அவரது உடலில் இருந்து கொரோனா வைரஸை உடனடியாக வெளியேற்றியது.ஆனால் இந்த எதிர்ப்பு சக்தி கலவையை அவ்வளவு சுலபத்தில் அனைவராலும் பெற இயலாது. அப்போது இந்த சிகிச்சை அளிக்க ஒரு அமெரிக்கருக்கு 20 ஆயிரம் டாலர் செலவாகும்.

ஐதராபாத்: கடந்தாண்டு அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டபோது கொடுக்கப்பட்ட மோனோ கிளோனல் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து கலவை அவரது உடலில் இருந்து கொரோனா வைரஸை உடனடியாக வெளியேற்றியது.



latest tamil news



ஆனால் இந்த எதிர்ப்பு சக்தி கலவையை அவ்வளவு சுலபத்தில் அனைவராலும் பெற இயலாது. அப்போது இந்த சிகிச்சை அளிக்க ஒரு அமெரிக்கருக்கு 20 ஆயிரம் டாலர் செலவாகும். இதனால் அமெரிக்க நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களால் இந்த சிகிச்சை பெற முடியாது என்று அப்போதைய டிரம்பின் எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் விமர்சித்திருந்தார்.

வழக்கமாக எம்-ஆர்என்ஏ தடுப்பு மருந்து ஊசிகள் 2 டேஸ் செலுத்தப்பட்டு நுரையீரலில் உள்ள வைரஸ் அழிக்கப்படும். இந்த எதிர்ப்பு சக்தி கலவையை அளித்து வைரஸ் தாக்கிய நோயாளியை குணப்படுத்த முடியுமா என ஹைதராபாத்தைச் சேர்ந்த ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட்ரோ என்ராலஜி அமைப்பு சோதனை செய்து பார்த்தது.

இந்த மருந்துக் கலவை அளிக்கப்பட்ட 40 கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகள் உடனடியாக குணமாகி உள்ளதாக இந்த அமைப்பின் தலைவர் டாக்டர் நாகேஷ்வர ரெட்டி தற்போது தகவல் அளித்துள்ளார். இந்தியாவில் இந்த சிகிச்சையைப் பெற ஒருவர் 70 ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியது அவசியம்.

எனவே இந்த சிகிச்சையை அனைவராலும் பெறமுடியுமா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அதே சமயத்தில் ஏற்கனவே கொரோனா வைரஸ் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் உடலில் இந்த நோய் எதிர்ப்பு சக்தி கலவையை செலுத்த முடியாது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.


latest tamil news


உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்போது இதனை செலுத்தினால் அதுவே உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கோவாக்ஸின், கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பு மருந்து ஊசிகள் செலுத்தப்படும் நிலையில் இந்த மோனோகிளோனல் ஆன்டிபாடி காக்டைல் நோய் எதிர்ப்பு சக்தியை செலுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு அங்கீகாரம் கிடைத்து, இது பொதுமக்களுக்கு செலுத்தப்படுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
13-ஜூன்-202113:46:52 IST Report Abuse
Visu Iyer அப்படின்னா.. (இந்த சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள்) த-டு-ப்பூசி போட்டுக் கொள்ள தேவையில்லை என்று புரிகிறது..
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
13-ஜூன்-202107:11:37 IST Report Abuse
Svs Yaadum oore இந்தியாவில் இந்த சிகிச்சையைப் பெற ஒருவர் 70 ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியது அவசியமாம் .... இதற்கு அங்கீகாரம் கிடைத்து, இது பொதுமக்களுக்கு செலுத்தப்படுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று செய்தி ..அது வரையில் போற உயிர் போகவேண்டியதுதான் ...இந்த தடுப்பூசியிலும் நிறைய பிரச்சனைகள் ....இந்த நேரத்தில் எதற்கு சித்த , ஆயுர்வேத , ஹோமியோபதி மருத்துவம் ஏன் தமிழக ஒன்றியத்தில் நிறுத்தப்பட்டது?? .... இங்குள்ள தமிழக ஒன்றிய அமைச்சர் இதற்கு பதில் கூறுவாரா??....இதற்கு காரணம் முற்போக்கு சிந்தனையாளர் என்று கூறி கொள்ளும் திருட்டு தி முக ஆதரவு இடது சாரி கிறிஸ்துவ மிஷநரிகளா ??........
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
13-ஜூன்-202113:48:53 IST Report Abuse
Visu Iyerநீங்க சொல்றதை பார்த்தால் அப்போ தடுப்பூசி போட்டுக் கொள்ள தேவையில்லை என்பது புரிகிறது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X