தமிழ்நாடு

1,634 கோடி! அரசு மருத்துவமனைகள், கல்லூரிகளின் மேம்பாட்டு பணி .... ரூ.275 கோடியில் சிறப்பு சிகிச்சை மையம்

Added : ஜூன் 13, 2021
Share
Advertisement
சென்னை : கீழ்ப்பாக்கத்தில், 275 கோடி ரூபாய் செலவில், பல்நோக்கு சிறப்பு சிகிச்சை மையம் அமைய உள்ளது. சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை உதவியுடன், 141 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும், பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டுமான பணிகளை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று ஆய்வு செய்தார்.பின், அவர் அளித்த
 1,634 கோடி!   அரசு மருத்துவமனைகள், கல்லூரிகளின் மேம்பாட்டு பணி ....  ரூ.275 கோடியில் சிறப்பு சிகிச்சை மையம்

சென்னை : கீழ்ப்பாக்கத்தில், 275 கோடி ரூபாய் செலவில், பல்நோக்கு சிறப்பு சிகிச்சை மையம் அமைய உள்ளது.

சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை உதவியுடன், 141 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும், பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டுமான பணிகளை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று ஆய்வு செய்தார்.பின், அவர் அளித்த பேட்டி:ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன், தமிழகத்தில் மூன்று பெரிய மருத்துவமனைகளில், பெரிய கட்டடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஏழு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை மேம்படுத்தவும், 11 மாவட்ட அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தவும் பணி நடைபெறுகிறது.

இதற்காக, 1,634 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில், பல்நோக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு கட்டடங்கள் கட்ட, 141 கோடி ரூபாய் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்காக, 134 கோடி ரூபாய் என, 275 கோடி ரூபாய் கட்டப்பட்டு வருகிறது. இதில், 500 படுக்கைகளுடன், 2022க்குள் இம்மையம் பயன்பாட்டுக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X