பொது செய்தி

இந்தியா

மகன் சிகிச்சைக்கு ரூ.16 கோடி நன்கொடை திரட்டிய தந்தை

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
ஐதராபாத்-உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட, 3 வயது சிறுவனின் சிகிச்சைக்கு, 65 ஆயிரம் பேர், 16 கோடி ரூபாய் நிதி அளித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானாவின் ஐதராபாதைச் சேர்ந்தவர் யோகேஷ் குப்தா. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.மரபணு நோய்இவரது மகன், அயான்ஷ் குப்தா, 'ஸ்பைனல் மஸ்குலார் அட்ரோபி'

ஐதராபாத்-உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட, 3 வயது சிறுவனின் சிகிச்சைக்கு, 65 ஆயிரம் பேர், 16 கோடி ரூபாய் நிதி அளித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.latest tamil news


தெலுங்கானாவின் ஐதராபாதைச் சேர்ந்தவர் யோகேஷ் குப்தா. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.மரபணு நோய்இவரது மகன், அயான்ஷ் குப்தா, 'ஸ்பைனல் மஸ்குலார் அட்ரோபி' எனப்படும் அரிய வகை மரபணு நோயால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாதிக்கப்பட்டான்.'முறையான சிகிச்சையை உடனடியாக துவங்காவிட்டால், அந்த சிறுவன் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் உயிரிழந்து விடுவான்' என டாக்டர்கள் தெரிவித்தனர்.

'உடல் தசைகளை வலுவிழக்க செய்யும் இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கை, கால்களை அசைக்க முடியாது. சுயமாக எழவோ, உட்காரவோ, நடக்கவோ முடியாது. 'உணவு உட்கொள்வதே அவர்களுக்கு மிக கடினமாக இருக்கும்' என, டாக்டர்கள் தெரிவித்தனர். 'சிறுவனின் சிகிச்சைக்கு, 'ஸால்ஜென்ஸ்மா' என்ற மருந்தை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும்' என, டாக்டர்கள் தெரிவித்தனர். உலகின் மிக விலை உயர்ந்த மருந்தாக கருதப்படும் இது ஒரு டோஸ், 16 கோடி ரூபாய் என்பது தெரியவந்தது.தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் யோகேஷ், செய்வதறியாமல் திகைத்தார்.


latest tamil news


பின், சமூக வலைதளங்கள் வாயிலாக, மகனின் சிகிச்சைக்கு பொதுமக்களிடம் இருந்து பணம் திரட்ட முடிவு செய்தார்.இது தொடர்பாக கடந்த பிப்ரவரியில், சமூக வலைதளங்கள் உட்பட பல்வேறு வழியிலும், நன்கொடை திரட்டும் பணியை துவக்கினார். கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, நடிகை அனுஷ்கா சர்மா, நடிகர்கள் அனில் கபூர், அஜய் தேவ்கன் உட்பட, பல்வேறு துறை பிரபலங்களும் நன்கொடை அளித்தனர்.குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன், இந்த விவகாரம், எம்.பி., ஒருவரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.


நன்றி

அவர் பார்லிமென்டில், இது குறித்து பேசியதன் வாயிலாக, அந்த மருந்துக்கான வரியில், 6 கோடி ரூபாய்க்கு மத்திய அரசு விலக்கு அளித்தது.மொத்தம், 65 ஆயிரம் பேர், சிறுவனின் சிகிச்சைக்கு நன்கொடை அளித்தனர். ஆறு மாதங்களில் தேவையான தொகை திரட்டப்பட்டு, அமெரிக்காவில் இருந்து மருந்து இறக்குமதி செய்யப்பட்டது.கடந்த மாதம் 22ம் தேதி, இறக்குமதி செய்யப்பட்ட மருந்து சிறுவனுக்கு செலுத்தப்பட்டது. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சிறுவனின் பெற்றோர், 65 ஆயிரம் பேருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அறவோன் - Chennai,இந்தியா
13-ஜூன்-202119:03:07 IST Report Abuse
அறவோன் ஒரு செங்கல்லின் விலை ரூ 1450 கோடிகள்
Rate this:
14-ஜூன்-202106:15:41 IST Report Abuse
இவன் குறைவோன், எந்த கட்டடமும் அடிக்கல் நாட்டி தான் கட்ட முடியும்....
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
13-ஜூன்-202117:03:59 IST Report Abuse
DVRR என்னை மன்னிக்கவும்???ஒரு குழந்தைக்கு ரூ 16 கோடி செலவு செய்து மருந்து கொடுத்து?????????இது எனக்கு சரியாகபடவில்லை????அப்படி குழந்தை நீண்ட நாட்கள் இந்த மருந்தை கொடுத்ததால் அந்த நோய் இல்லாமல் இருக்கும் என்று அந்த மருந்து நிறுவனம் காரண்டீ / வாரன்டி கொடுக்குமா அப்படி ஏதேனும் நடந்தால் (நடக்கக்கூடாது அந்த குழந்தைக்கு) அந்த நிறுவனம் என்ன செய்யும். ஒரு மருந்து ரூ 16 கோடி அதவது USD 2.4 மில்லியன் தோராயமாக???இதை நம்ப முடியவில்லை
Rate this:
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
14-ஜூன்-202101:06:41 IST Report Abuse
மதுரை விருமாண்டிI fully agree with you. இந்த மருந்தால் முற்றிலும் குணமாகும் என்று ஒரு உத்தரவாதமும் இல்லை. இந்த பணத்தில் பதினாயிரம் குழந்தைகளை சாதாரண வயிற்றுப்போக்கு நோயிலிருந்து காப்பாற்றி உயிரை கொடுக்கலாம்.. இருந்தாலும் this is a very complex question....
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்WHAT IS YOUR DISPOSAL FOR THIS CHILD IN QUESTION ?...
Rate this:
Cancel
V Gopalan - Bangalore ,இந்தியா
13-ஜூன்-202116:19:17 IST Report Abuse
V Gopalan Indeed it is very much happy, Pray Almighty the God to recover fully and healthy. Humanity is still exist. God is great.
Rate this:
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
14-ஜூன்-202101:04:00 IST Report Abuse
மதுரை விருமாண்டிஹா ஹா ஹா ... நன்றி எதுக்கு ? நோயை கொடுத்ததுக்கா? மருந்தை விஞ்ஞானி கண்டுபிடித்துக்கா? அந்த மருந்தை இவர்களால் வாங்க முடிந்ததற்கா இல்லை எதுக்கு ? இதனால் பலன் இருக்கணும் என்று நம்பவா, இந்த பணத்தில் பதினாயிரம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றி இருக்கலாமே அதை ஏன் செய்யவில்லை.. இதெல்லாம் செய்யாத இல்லாத ஒரு மாயைக்கு நன்றியா ??...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X