பொது செய்தி

இந்தியா

குழந்தைகளுக்கு வழக்கமான தடுப்பூசி போடுவது குறைவு

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி-கொரோனா பரவல் காரணமாக பெற்றோர்கள், பிறந்த குழந்தைகளுக்கு வழக்கமான தடுப்பூசி போட தவறுவதாக, மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.குழந்தைகளுக்கு பிறந்தது முதல் பல கட்டங்களாக தட்டம்மை, போலியோ உள்ளிட்ட நோய்களை தடுக்க தடுப்பூசி, சொட்டு மருந்து ஆகியவை போடப்படுகின்றன.தேசிய குழந்தைகள் நலத் திட்டத்தின் கீழ், 1 வயது வரை உள்ள, 20 - 22 லட்சம் குழந்தைகளுக்கு,

புதுடில்லி-கொரோனா பரவல் காரணமாக பெற்றோர்கள், பிறந்த குழந்தைகளுக்கு வழக்கமான தடுப்பூசி போட தவறுவதாக, மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



latest tamil news


குழந்தைகளுக்கு பிறந்தது முதல் பல கட்டங்களாக தட்டம்மை, போலியோ உள்ளிட்ட நோய்களை தடுக்க தடுப்பூசி, சொட்டு மருந்து ஆகியவை போடப்படுகின்றன.தேசிய குழந்தைகள் நலத் திட்டத்தின் கீழ், 1 வயது வரை உள்ள, 20 - 22 லட்சம் குழந்தைகளுக்கு, மாதந்தோறும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த வகையில் ஆண்டுக்கு, 2.60 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்த எண்ணிக்கை, கொரோனா பரவல் காரணமாக வெகுவாக குறைந்து விட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.பெற்றோர்கள் கொரோனா அச்சத்தால், மருத்துவமனைகளுக்கு செல்ல அஞ்சி, குழந்தைகளுக்கு வழக்கமாக போடும் தடுப்பூசிகளை கூட போடாமல் உள்ளதாக கூறப்படுகிறது.


latest tamil news


ஊரடங்கும், போக்குவரத்து வசதியின்மையும், பெற்றோரின் இத்தகைய முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.இது குறித்து கொலம்பியா ஆசியா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் சுமித் குப்தா கூறியதாவது:குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஓரிரு மாதங்கள் தள்ளி வைக்கலாம். ஆனால் போடாமல் விடக் கூடாது. கொரோனா இரண்டாவது அலையில் பெற்றோர்கள், 60 சதவீத குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவில்லை என்ற புள்ளி விபரம் கவலை அளிக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜூன்-202107:41:52 IST Report Abuse
ஆப்பு பொது மக்களை போலுய்சை உட்டு அடிச்சு முடக்கி வுட்டிலே உக்காத்தி வெய்யுங்க. குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுருவாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X