திறமையற்ற மத்திய அரசு; காங்., கடும் குற்றச்சாட்டு| Dinamalar

திறமையற்ற மத்திய அரசு; காங்., கடும் குற்றச்சாட்டு

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (61)
Share
புதுடில்லி: 'கோவிட் இரண்டாம் அலையின் போது நரேந்திர மோடி அரசின் திறமையின்மையால் இந்த நாடே துயரங்களை சந்திக்க நேர்ந்தது' என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.'கோவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த போர்கால அடிப்படையில் பொது சுகாதார திட்டத்தை அறிவித்து இருக்க வேண்டிய மத்திய அரசு பிரதமரின் மாய புகழ் பிம்பத்தை காப்பதிலேயே கவனமாக இருந்தது. 'இந்த அரசின் திறமையின்மையால்
CentralGovt, Congress, Covid Situation, காங்கிரஸ், மத்திய அரசு, திறமையின்மை

புதுடில்லி: 'கோவிட் இரண்டாம் அலையின் போது நரேந்திர மோடி அரசின் திறமையின்மையால் இந்த நாடே துயரங்களை சந்திக்க நேர்ந்தது' என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

'கோவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த போர்கால அடிப்படையில் பொது சுகாதார திட்டத்தை அறிவித்து இருக்க வேண்டிய மத்திய அரசு பிரதமரின் மாய புகழ் பிம்பத்தை காப்பதிலேயே கவனமாக இருந்தது. 'இந்த அரசின் திறமையின்மையால் நம் சகோதரர்களை இழந்துள்ளோம். இதை என்றைக்கும் மறக்க மாட்டோம்' என காங்கிரஸ் கட்சி 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளது.


latest tamil news


இதையடுத்து 'யார் பொறுப்பு?' என்ற 'ஹேஷ்டேக்' உடன் பல்வேறு காங்., தலைவர்களும் சமூகவலைதளங்கள் வாயிலாக பா.ஜ., மீது குற்றம் சுமத்தி உள்ளனர். காங்., எம்.பி., ராகுல் கூறியுள்ளதாவது: பெருந்தொற்று பணவீக்கம் வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருப்பது யார் என்பதை மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X