பொது செய்தி

இந்தியா

கடலுக்குள் 40 காலி பஸ்: மீன்வளம் பெருகிட இலங்கை புதிய முயற்சி

Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
ராமேஸ்வரம்: பாக் ஜலசந்தி கடலில் மீன்வளத்தை பெருக்க இலங்கை அரசு, கடற்படை கப்பல் மூலம், 40 பழைய பஸ்களை கடலுக்குள் போட்டு மீன்களுக்கு புகலிடம் ஏற்படுத்தியுள்ளது.பாக் ஜலசந்தி கடலில் ராமேஸ்வரம் முதல் கோடியக்கரை உள்ள தமிழக விசை, நாட்டுப்படகு மீனவர்கள், இலங்கையில் யாழ்ப்பாணம் முதல் மன்னார் வரை உள்ள மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். தமிழக மீனவர்கள் பயன்படுத்தும் இழுவலையால்,
Srilanka, Empty Bus, இலங்கை, காலி பஸ், பேருந்து, கடல், மீன்

ராமேஸ்வரம்: பாக் ஜலசந்தி கடலில் மீன்வளத்தை பெருக்க இலங்கை அரசு, கடற்படை கப்பல் மூலம், 40 பழைய பஸ்களை கடலுக்குள் போட்டு மீன்களுக்கு புகலிடம் ஏற்படுத்தியுள்ளது.

பாக் ஜலசந்தி கடலில் ராமேஸ்வரம் முதல் கோடியக்கரை உள்ள தமிழக விசை, நாட்டுப்படகு மீனவர்கள், இலங்கையில் யாழ்ப்பாணம் முதல் மன்னார் வரை உள்ள மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். தமிழக மீனவர்கள் பயன்படுத்தும் இழுவலையால், இலங்கை பகுதியில் மீன் வளம் அழிந்து, மீனவர்கள் பொருளாதார ரீதியாக நலிவடைந்து உள்ளனர்' என அந்நாடு மீன்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டினார்.மீன்கள் இனப்பெருக்கத்திற்கு தமிழகத்தில் விதிக்கப்பட்ட, 60 நாட்கள் தடை காலம் நாளை முடிகிறது.


latest tamil news


இதற்கிடையில் இலங்கை வடக்கு கடலில் மீன்வளத்தை பெருக்கிட, இலங்கை காங்கேசன் துறைமுகம் முதல் மன்னார் வரை உள்ள கடல் பகுதியில், 40 பழைய பஸ்களின் கூடுகளை கடலுக்குள் போட இலங்கை மீன்துறை முடிவு செய்தது. முதல் கட்டமாக ஜூன் 12ல், கடற்படை கப்பல் மூலம், 20 பழைய பஸ்களின் கூடுகளை கடலில் போட்டு வருகின்றனர். இப்பணி முடிந்த பின் மேலும், 20 பஸ் கூடுகளை கடலில் விட முடிவு செய்துள்ளனர்.இந்த பஸ் கூடுகள் மீன்களுக்கு புகலிடமாக மாறியதும், அதனுள் ஏராளமான மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
14-ஜூன்-202101:17:36 IST Report Abuse
M  Ramachandran ஏற்கனவே கடல் குப்பைமேடக்கி விட்டனர். இந்த சீன அடிவருடி ராஜபக்கதே கும்பல் அவர்கள் சொல்படி குப்பையை மேலும் கடலில் கொட்டி இயற்கை வளத்தை இந்தியாவிற்கு எதிராக கடலை நாசமாக்க துணிந்து விட்டது. இப்படிஎன விட்டால் சரி படாது. இலங்கையை நம் இந்தியா பிடியில் கொண்டவர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.நாம் மிக தாமத மாக சீனனை தற்போது தான் புரிந்து கொண்டுள்ளோம். மோசமான சீனாவின் கைய வெட்டப்படவேண்டும். ஒரு வழியாக மேற்கத்தியநாடுகள் புரிந்து கொண்டு செயலாற்ற தொடங்கி யுள்ளார்கள். அதை கண்டு சீனன் உறுமுகிறான்.
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
13-ஜூன்-202120:32:17 IST Report Abuse
Ram சீனா காரன் தமிழ்நாட்டுக்கு வரும் காலம் தூரத்தில் இல்லை , இனிமேதான் இருக்கு நம்ம மீனவர்களுக்கு . தமிழக அராசு மத்திய அரசுடன் இணைந்து இதை தடுக்கவேண்டும்
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
13-ஜூன்-202118:33:05 IST Report Abuse
கொக்கி குமாரு இலங்கைக்கு விவரம் பத்தலை. இதுவே கட்டுமரம் கருணாநிதியா இருந்திருந்தா மீன் பிடிக்க 40 பஸ் விட்டதன் செலவு என்று சொல்லி 40 கோடி ரூபாய்க்கு கணக்கு எழுதி தனது ரத்த சொந்தங்களின் சொத்து மதிப்பை 40 கோடிகள் உயர்த்தியிருப்பார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X