உங்கள் அப்பா மத்திய அமைச்சராக இருந்தபோது அப்படி செய்தாரோ என்னவோ...

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
மத்தியில் ஆளும் பா.ஜ., அரசே, தேசத் துரோக வழக்குகளை ஏன் அவ்வப்போது போடுகிறீர்கள். மொத்தமாக ஒரு பட்டியல் எடுங்கள். அவர்கள் அனைவரையும் தேசத் துரோக வழக்கில் சிறையில் தள்ளி விட வேண்டியது தானே!.- தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்'தேச நலன் கருதும் எந்த அரசும், அப்படி செய்யாது. ஒருவேளை உங்கள் அப்பா, மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது, இப்படி செய்தாரோ என்னவோ...' என,
உங்கள் அப்பா மத்திய அமைச்சராக இருந்தபோது அப்படி செய்தாரோ என்னவோ...

மத்தியில் ஆளும் பா.ஜ., அரசே, தேசத் துரோக வழக்குகளை ஏன் அவ்வப்போது போடுகிறீர்கள். மொத்தமாக ஒரு பட்டியல் எடுங்கள். அவர்கள் அனைவரையும் தேசத் துரோக வழக்கில் சிறையில் தள்ளி விட வேண்டியது தானே!.
- தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்


'தேச நலன் கருதும் எந்த அரசும், அப்படி செய்யாது. ஒருவேளை உங்கள் அப்பா, மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது, இப்படி செய்தாரோ என்னவோ...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் அறிக்கை.தமிழக மக்களின் நலனை கருதி, முத்தான பல திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி, முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வராக ஸ்டாலின் திகழ்கிறார்.
- கிராமப்புற தொழில்துறை அமைச்சர் அன்பரசன்


'ஸ்டாலினுக்கே தெரியும், இதெல்லாம் வெத்து பாராட்டுகள் என்று...' என, கூறத் துாண்டும் வகையில், கிராமப்புற தொழில்துறை அமைச்சர் அன்பரசன் பேச்சு.ஜூன் மாதத்தில், எந்த தேதியில், எத்தனை தடுப்பூசி வந்து சேரும் என்பதை மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதற்கேற்ற வகையில் திட்டமிடவும் சொல்லியுள்ளது. மாநில அரசிடம் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால், தடுப்பூசி இல்லை என அரசியல் செய்கிறது.
- தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்


'இது கொரோனா காலம் என்பதால், அரசியலும் அதைச் சுற்றியே நிகழ்கிறது. கொரோனா காணாமல் போனதும், இந்த அரசியலும் மறைந்து விடும்...' என, ஆறுதல் கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை.கோடிக்கணக்கான தொழிலாளர்கள், பணியாளர்கள், அவர்களது குடும்பங்களின் சிரமத்தை குறைக்க, மத்திய அரசு நிச்சயமாக இந்த மாதம் முதல், 6 மாதங்களுக்கு, வங்கிக்கடன் தவணையை திருப்பி செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும்.
- நடிகர் சரத்குமார்


'கடன் பிரச்னைகளில் எல்லாரும் சிக்கித் தவிப்பது போல, நீங்களும் சிக்கியுள்ளீர்களோ என்ற சந்தேகத்தை உங்களின் உணர்ச்சிப்பூர்வமான அறிக்கை சொல்கிறது...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர், நடிகர் சரத்குமார் அறிக்கை.உ.பி.,யில் யோகி ஆதித்யநாத் அரசின் தலைமைச் செயலராக இருந்து ஓய்வுபெற்ற அனுப்சந்திர பாண்டே, தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி மரபுகளை மீறுவதை விட, யோகி ஆதித்யநாத்தையே தேர்தல் கமிஷனராக நியமித்து விட வேண்டியது தானே!'இனிமேல் என்ன ஆராய்ந்து என்ன பயன்;
- தமிழக காங்., செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்


'நல்ல யோசனையாக இருக்கிறதே... மத்திய அரசு, அடுத்த முறை உங்களிடம் கேட்டு, நியமனங்களை செய்யும்...' என காட்டமாக கூறத் தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.தேர்தல் தோல்விக்கான காரணம், வருங்காலத்தின் அரசியல் அணுகுமுறை போன்றவை குறித்து விவாதிக்க, விரைவில் மாவட்ட செயலர்கள் கூட்டம் நடக்கவுள்ளது. அதுவரை, சமூக வலைதளங்களில் வரும் தவறான கருத்துகளை கட்சியினர் யாரும் நம்ப வேண்டாம்.
- தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்


latest tamil news
தோல்விக்கான காரணம் தெரிந்தது தானே... எதற்கு வீண் வேலை... உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள் கேப்டன்...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை.கடந்த ஆண்டு ஊரடங்கின் போது, மின்கட்டணங்கள் குறித்து மிக பெரிய புகாரை எழுப்பிய, தி.மு.க., மற்றும் அது குறித்து விவாதம் நடத்திய ஊடகங்கள், இந்த ஊரடங்கில் பன்மடங்கு மின் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், வாய் மூடி மவுனம் காப்பது ஏன்?
- தமிழக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி


'கடந்த ஆண்டில் வலுவாக, நான்காண்டுகள் பதவியில் இருந்த அரசிடம் மக்கள் கேள்வி எழுப்பினர். இந்த புதிய அரசுக்கு, வயது ஒரு மாதம் தானே ஆகிறது; அதற்குள் கேள்வி கேட்பதா என நினைத்திருக்கலாம்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.முள்ளிவாய்க்கால் இனக்கொலைக்கான நீதிக் குரல்கள் உலக அரங்கில் வலுப்பெற்று வரும் சூழலில், ஈழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தியுள்ள, 'தி பேமிலிமேன் - 2' தொடரின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். அமேசான், உடனே அதை தன் தளத்திலிருந்து அகற்ற வேண்டும்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்


'அந்த தொடர், மிகவும் அருமையாக இருக்கிறது; உண்மையை அப்படியே புட்டு புட்டு வைக்கிறது என்கின்றனரே. நீங்களும் ஒரு முறை பார்த்து விடுங்கள்... மொத்த தொடர்களும் வந்த பின் எதிர்ப்பு அறிக்கை விடலாம்...' என, பதில் அளிக்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.மேட்டூர் அணையில் நீர் திறக்கச் செல்லும் முதல்வர் ஸ்டாலின், கடைமடை பகுதிகளுக்கும் செல்ல வேண்டும். அங்கு நீர் வரத்து சரியாக செல்ல தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.
- தி.மு.க., செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன்


'தி.மு.க.,வில் இருந்தபடி, தலைவருக்கே அறிவுரை கூறுகிறீர்களா... முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் தெரியாததா, உங்களுக்கு தெரிந்து விடப் போகிறது என, கட்சியினர் பாயப் போகின்றனர்...' என, போட்டுக் கொடுக்கத் துாண்டும் வகையில், தி.மு.க., செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை.விதை, உரங்கள், இடுபொருட்கள் என அனைத்தின் விலையையும் உயர்த்தியுள்ள மத்திய அரசு, நெல், கோதுமை உட்பட, 14 தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி நிர்ணயித்துள்ளது. அதனால் விவசாயிக்கு எந்த பலனும் கிடைக்கப் போவது இல்லை
- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன்


'விவசாயிகளுக்கு பயன் தரும் செயலை, மத்திய அரசு செய்துள்ளதை எப்படி பக்குவமாக எதிர்க்கிறீர்கள்... அங்கு தான்யா, கம்யூ.,க்களின் நேர்த்தி தென்படுகிறது...' என, 'பாராட்டத்' தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் அறிக்கை.


Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
17-ஜூன்-202116:09:57 IST Report Abuse
ponssasi எங்க சுப்ரீம் ஸ்டாருக்கு கடனா? மொத்தமா ஆட்டயப்போட்டுட்டு காசோலை கொடுத்து மோசடி செய்து அப்பீல் போவாரே ஒழிய கைநீட்டி எங்கும் கடன் வாங்க மாட்டார்.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
13-ஜூன்-202122:06:47 IST Report Abuse
Nagarajan D புள்ளி ராஜாவுக்கு பிறந்தவன் என்ன புலியாகவா இருப்பான்...
Rate this:
Cancel
Rajasekaran - Chennai,இந்தியா
13-ஜூன்-202118:12:54 IST Report Abuse
Rajasekaran தோல்விக்கான கரங்களை வீட்டிற்கு வெளியே தேடினால் கிடைக்காது என்று விஜயகாந்திற்கு யார் எடுத்துரைப்பது ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X