பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் இதுவரை 95.26 சதவீதம் பேர் கோவிட் பாதிப்பில் இருந்து நலம்

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் கோவிட் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில், தொடர்ந்து 6வது நாளாக தினசரி பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்தது. இதுவரை 95.26 சதவீதம் பேர் கோவிட் தொற்று பாதிப்பில் இருந்து நலமடைந்துள்ளனர்.இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 80,834 பேர் மட்டுமே கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்,
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கோவிட், கோவிட்வைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: நாடு முழுவதும் கோவிட் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில், தொடர்ந்து 6வது நாளாக தினசரி பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்தது. இதுவரை 95.26 சதவீதம் பேர் கோவிட் தொற்று பாதிப்பில் இருந்து நலமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 80,834 பேர் மட்டுமே கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2 கோடியே 94 லட்சத்து 39 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 1,32,062 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 80 லட்சத்து 43 ஆயிரத்தை தாண்டியது. தற்போது 10.26 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,70,384 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news


இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 95.26 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.26 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 3.48 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


தடுப்பூசி


latest tamil news




சோதனைகள்

இந்தியாவில் நேற்று (ஜூன் 12) ஒரே நாளில் 19,00,312 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 37 கோடியே 81 லட்சத்து 32 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.


latest tamil news




உலக பாதிப்பு


இன்று (ஜூன் 13-ம் தேதி) காலை 10:20 மணி நிலவரப்படி உலகில் கோவிட் தொற்றால் 17 கோடியே 64 லட்சத்து 19 ஆயிரத்து 545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 லட்சத்து 10 ஆயிரத்து 777 பேர் பலியாகினர். 16 கோடியே 03 லட்சத்து 90 ஆயிரத்து 271 பேர் மீண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
13-ஜூன்-202122:11:14 IST Report Abuse
BASKAR TETCHANA உலகமாக ஊழல் மன்னன் ஸ்டாலின் சொல்லுகிறார் கோரோனோ 95 சதவிகிதம் குணமடைந்து விட்டார்கள் என்று எவ்வளவு பெரிய பொய்யை சொல்லுகிறார் உலகமே நம்பி விட்டார்கள் . எவ்வளவு வாழ்த்துக்கும் வருகிறதாம். அதை கவனிக்க ஒரு ஐ.எ.எஸ் நியமனமாம் கூத்தாடிகள்.
Rate this:
Cancel
Ramona - london,யுனைடெட் கிங்டம்
13-ஜூன்-202111:50:01 IST Report Abuse
Ramona 15 ஆம் தேதி க்கு பிறகு இந்த புள்ளி விவரங்கள் குறையுமா,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X