அரசியல் செய்தி

தமிழ்நாடு

மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு: பா.ஜ., போராட்டம்

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (72)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் 27 மாவட்டங்களில் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து, தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்வுகள் அளித்தது. அதில், கோவை, திருப்பூர், நீலகிரி,சேலம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற

சென்னை: தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் 27 மாவட்டங்களில் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



latest tamil news



தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து, தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்வுகள் அளித்தது. அதில், கோவை, திருப்பூர், நீலகிரி,சேலம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் வரும் திங்கட்கிழமை முதல் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும் என தமிழக அறிவித்தது. இதற்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.


latest tamil news



டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். இதனை எதிர்த்து பா.ஜ., தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தமிழக பா.ஜ., தலைவர் முருகன் அறிவித்தார்.


latest tamil news

சென்னை ஆயிரம்விளக்கில் நடந்த ஆர்பாட்டத்திற்கு தமிழக பாஜ மாநில செயற்குழு உறுப்பினர் தாஸ் பாண்டியன் தலைமை வகித்தார்.



இதன்படி, சென்னை, திருப்பூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான வாசகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.


latest tamil news



சென்னை திநகரில் எல்.முருகன் தலைமையில் போராட்டம் நடந்தது. அப்போது முருகன் கூறியதாவது:
டாஸ்மாக் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. ஆட்சியில் இல்லாத ஒரு நிலை. ஆட்சிக்கு வந்த பின் ஒரு நிலை என முதல்வர் செயல்படுகிறார். பெட்ரோல், டீசல் விலையை தேர்தல் அறிக்கையில் கூறியது போல் குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



பா.ஜ., போராட்டம் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: மதுபான கடைகளுக்கு எதிராக புதுச்சேரியில் முதலில் பா.ஜ., போராட வேண்டும். கடந்த ஆட்சி காலத்திலும் கொரோனா உச்சத்தில் இருந்த போது, டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பா.ஜ.,வுக்கு உண்மையில் தமிழகம் மீது அக்கறை இருந்தால், தமிழகத்திற்கு அதிகளவு தடுப்பூசியை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
14-ஜூன்-202118:21:46 IST Report Abuse
Raj போராட்டத்தில் கலந்துக்கிட்டது (படத்தில்) எட்டு பேர் அதில் ரெண்டு பேர் முக கவசம் போடல
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
14-ஜூன்-202106:46:46 IST Report Abuse
Darmavan ம சுப்பிரமணியம் பேசுவது அரவிலிதனம் பெட்ரோல் விலையை 5 ரூபாய் பாண்டியில் சாராயக்கடைகளை மூடுவேன் என்று சொல்லி ஒட்டு வாங்கவில்லை தமிழ் நாடு போல். பெட்ரோல் விலையை 5 ரூபாய் குறைப்பேன் என்று சொல்லியும் ஒட்டு வாங்கவில்லை.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜூன்-202123:52:06 IST Report Abuse
தமிழவேல் புதுவையில் மூடிட்டானுவோளா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X