பொது செய்தி

இந்தியா

உலக சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்: பிரதமர்

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி: ‛ஒரே பூமி; ஒரே ஆரோக்கியம்' என்ற திட்ட அணுகுமுறையுடன் உலக நாடுகள் கூட்டாக செயல்பட்டு, உலக சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறி யுள்ளார்.பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமைப்பு, 'ஜி - 7' என, அழைக்கப்படுகிறது.நடப்பு ஆண்டுக்கான ஜி - 7 மாநாட்டை, 11 - 13 வரை, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைமை
UN, Meeting, PMModi, Speech, Desertification, Land Degradation, ஐநா, பிரதமர், மோடி, பேச்சு,

புதுடில்லி: ‛ஒரே பூமி; ஒரே ஆரோக்கியம்' என்ற திட்ட அணுகுமுறையுடன் உலக நாடுகள் கூட்டாக செயல்பட்டு, உலக சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறி யுள்ளார்.
பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமைப்பு, 'ஜி - 7' என, அழைக்கப்படுகிறது.நடப்பு ஆண்டுக்கான ஜி - 7 மாநாட்டை, 11 - 13 வரை, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைமை ஏற்று நடத்துகிறது. இதில் விருந்தினர்களாக பங்கேற்க இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக, பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் கோவிட் 2வது அலை ஏற்பட்ட போது ஜி7 நாடுகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்தியா போன்ற நாடுகளில் தடுப்பூசிக்கான மூலப்பொருள் விநியோக சங்கிலி, எந்தவிதத்தடையுமின்றி தொடர வேண்டும். இந்த தருணத்தில், உலகளாவிய சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ‛ஒரே பூமி; ஒரே ஆரோக்கியம்' என்ற திட்ட அணுகுமுறையுடன் உலக நாடுகள் கூட்டாக செயல்பட்டு, உலக சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.இந்தியாவில், கோவிட்டிற்கு எதிராக அரசு, தொழில்துறையினர், பொது மக்கள் என ஒட்டு மொத்த சமூகமும் போராடி கொண்டுள்ளது. இது போன்ற பெருந்தொற்றுகள் வருங்காலத்தில் ஏற்படுவதை தடுக்க உலகளாவிய ஒற்றுமை தேவை. இவ்வாறு பிரதமர் பேசினார்.


ஐ.நா., பொதுச் சபையில் நாளை உரை


ஐ.நா., பொதுச் சபை தலைவர் வோல்கன் போஸ்கிர் , ஐ.நா., பாலைவன மயமாக்கல் தடுப்பு மாநாட்டை கூட்டுவதாக அறிவித்துள்ளார். இதில் இம்மாநாட்டின் தலைவரான பிரதமர் மோடி 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நாளை (ஜூன் 14) உரையாற்ற உள்ளார்.ஐ.நா. உறுப்பு நாடுகள் விவசாய துறை தலைவர்கள் சர்வதேச சமுதாய குழுக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.


latest tamil news


நிலம் பாலைவனமாதலைத் தடுப்பதற்கு சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவற்றைத் துரிதப்படுத்துவது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தில் ஐ.நா., துணை பொதுச் செயலர் அமீனா முகமது உள்ளிட்டோரும் உரையாற்றவுள்ளனர்.

இக்கூட்டம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், 'உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்துவதில் நிலம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசியைப் போக்குதல், வறுமையை ஒழித்தல், மலிவான எரிசக்தியை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு நிலத்தின் முறையான பயன்பாடு அவசியமாக உள்ளது. நிலப் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலமாகவே ஐ.நா.,வின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை 2030-ம் ஆண்டுக்குள் அடைய முடியும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
14-ஜூன்-202100:34:50 IST Report Abuse
மதுரை விருமாண்டி //‛ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்' என்ற திட்டம் வேண்டுமாம்.// அது பணக்கார நாடுகளுக்கு.. தடுப்பூசி விநியோக சங்கிலி பத்திரமாக இருக்கணுமாம்.. உள்ளூரில் மருந்துக்கு தட்டுப்பாடு, வெளிநாட்டு ஏற்றுமதிக்கு கூப்பாடு.. இந்தியாவுக்கு இவரோட திட்டம் ஒரே நாடு பூரா சுடுகாடு மட்டும் தான்..
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
14-ஜூன்-202100:32:27 IST Report Abuse
மதுரை விருமாண்டி மூணு மாசம் முந்தி கொரோனாவிலேருந்து இந்தியர்களை காப்பாத்தி பூரா மனித குலத்தையும் காப்பாத்திட்டேன்னு மார்தட்டி கூவிச் சொன்ன வாயா இது ?? ஐயோ பாவம்..
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
14-ஜூன்-202100:30:36 IST Report Abuse
மதுரை விருமாண்டி எட்டுக் கட்டம் போட்டு பறந்து பறந்து பரப்புனா, அம்பது லட்சம் பேரை கும்பமேளான்னு கூட்டி கும்மியடிச்சா எந்த மருத்துவ கட்டமைப்பும் பத்தாதுங்குறது தெரிஞ்சிருக்கணும் பிரதமர் அவர்களே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X