பொது செய்தி

இந்தியா

டில்லியில் மார்க்கெட்கள், உணவகங்கள், வணிக வளாகங்களை திறக்க அனுமதி

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: டில்லியில், கோவிட் பரவல் குறைந்ததை தொடர்ந்து மார்க்கெட்கள், உணவகங்கள், வணிக வளாகங்களை திறக்க டில்லி அரசு அனுமதி வழங்கி உள்ளது.டில்லியில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.இன்று நிருபர்களை சந்தித்த முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது:* உணவகங்கள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இதனை ஒரு
டில்லி, ஊரடங்கு, தளர்வு, கட்டுப்பாடுகள், கெஜ்ரிவால்

புதுடில்லி: டில்லியில், கோவிட் பரவல் குறைந்ததை தொடர்ந்து மார்க்கெட்கள், உணவகங்கள், வணிக வளாகங்களை திறக்க டில்லி அரசு அனுமதி வழங்கி உள்ளது.

டில்லியில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று நிருபர்களை சந்தித்த முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது:

* உணவகங்கள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இதனை ஒரு வாரம் கண்காணிப்போம். பரவல் அதிகரித்தால், கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும். இல்லையென்றால், தொடரும்.

*நாளை காலை 5 மணி முதல், வழக்கமான நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும். சிலவற்றிற்கு கட்டுப்பாடுகள் தொடரும். அதற்கான அறிவிப்புகள் நாளை வெளியாகும்.

*பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்கள் திறக்க அனுமதி கிடையாது.

*சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசாரம், மதம் சார்ந்த திருவிழாக்களுக்கு தடை நீடிக்கும்

*நீச்சல் குளங்கள், மைதானங்கள், விளையாட்டு அரங்குகள், சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி இல்லை.

*அழகு நிலையங்கள், ஜிம்கள், யோகா நிலையங்கள், பூங்கா, தோட்டங்கள் மூடப்பட்டிருக்கும்.

*அரசு அலுவலகங்களில் பிரிவு ஏ அதிகாரிகள் 100 சதவீதமும், மற்ற பிரிவுகளில் 50 சதவீத அலுவலர்களும் அனுமதிக்கப்படுவார்கள். அத்தியாவசிய சேவைகள் தொடரும்.

*தனியார் அலுவலகங்கள் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையிலும், மார்க்கெட்கள், வணிக வளாகங்கள் அனைததும் காலை 10:00 மணி முதல், இரவு 8 மணி வரையிலும் செயல்படலாம்.

*கோவில்களை திறக்கலாம். ஆனால், பக்தர்ளுக்கு அனுமதி கூடாது.

*மண்டலத்திற்கு ஒன்று வீதம் வாரசந்தைகள் திறக்கப்படும்.


latest tamil news




*ஓட்டல்கள் மற்றும் திருமண மண்டபங்களில் திருமண நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது. வீடுகளில் மட்டும் திருமணத்திற்கு அனுமதி கிடைக்கும். அதில் 20 பேர் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

*இறுதிச்சடங்குகளில் 20 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.

*டில்லி மெட்ரோ ரயில்கள் மற்றும் பஸ்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும்

*ஆட்டோ, இ ரிக்ஷாக்கள், டாக்சிக்களில் 2 பயணிகளுக்கு மேல் அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-ஜூன்-202107:25:18 IST Report Abuse
Lion Drsekar எல்லா இடங்களிலும் இந்திய பாரம்பரிய மருந்துகளையும் கொடுங்கள் . எந்த ஒரு அலையும் வரவே வராது வந்தே மாதரம்
Rate this:
Cancel
Raj - Chennai ,இந்தியா
13-ஜூன்-202123:49:12 IST Report Abuse
Raj பதவி விலகு . மத்திய அரசு பார்த்துக்கொள்ளும் .
Rate this:
Cancel
13-ஜூன்-202122:32:46 IST Report Abuse
ஆப்பு கொரோனா பரவல் குறைஞ்சுதுன்னா மெடல் குத்திக்க பெரியவர். குறையலேன்னா, கெஜ்ரிவால் நிர்வாகம் சரியில்லை. ஐ.ஐ.டி யில் படிச்சுட்டு வந்த முட்டாள். சரிதானே சங்கிகளே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X