சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்த சென்ற பெண் உயிரிழப்பு

Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
தஞ்சாவூர் : கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள, வரிசையில் நின்ற பெண் மயங்கி விழுந்து இறந்தார்.தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஐந்து நாட்களுக்கு பின், நேற்று மீண்டும் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றதால், ஏராளமானோர் குவிந்தனர்.கும்பகோணத்தில், காரனேசன் மருத்துவமனையில், நேற்று காலை முதல், நுாற்றுக்கணக்கான பொதுமக்கள்,
 தடுப்பூசி செலுத்த சென்ற பெண் உயிரிழப்பு

தஞ்சாவூர் : கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள, வரிசையில் நின்ற பெண் மயங்கி விழுந்து இறந்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஐந்து நாட்களுக்கு பின், நேற்று மீண்டும் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றதால், ஏராளமானோர் குவிந்தனர்.கும்பகோணத்தில், காரனேசன் மருத்துவமனையில், நேற்று காலை முதல், நுாற்றுக்கணக்கான பொதுமக்கள், தடுப்பூசி போட்டுக் கொள்ள திரண்டனர்.

தடுப்பூசி செலுத்தும் மையங்களில், டோக்கன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வெகுநேரமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வரிசையில் நின்ற வள்ளிக்கண்ணு, 40, என்ற பெண் திடீரொன மயங்கி விழுந்தார். டாக்டர்கள் பரிசோதித்தபோது, அவர் இறந்து விட்டது தெரிந்தது.உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Marai Nayagan - Chennai,இந்தியா
15-ஜூன்-202111:33:16 IST Report Abuse
Marai Nayagan பல இடதுசாரி ஊடகங்கள் இதை பேசுவதில்லை.. இதை எல்லாம் கருத்தில் கொள்ளாத கேவலமான அரசும் சில அறமற்ற ஊடகங்களும் சசிகலா அரசியல் நுழைவு மற்றும் கோவில் அர்ச்சனை என மடைமாற்றுவது ஒரு ஏமாற்று வேலை.
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
15-ஜூன்-202110:40:24 IST Report Abuse
Hari போனமாதம் தடுப்பு உசி போடவேண்டாம் என சொல்லி திரிந்தவர்கள் இன்று தடுப்பூசி முகாம் நடத்துகிறார்கள் ,அதனால அந்த ஊசி போட்டாலும் பொடாவிடடாலும் மக்களின் மகிழ்வான மரணம் சிறப்பானதே ,ஆனால் ஒன்றுமட்டும் புரியலை ஒரு அரசியல்வாதியும் சாகலே எப்படி அவர்கள் மட்டும் தப்பிக்கிறார்கள்.
Rate this:
Cancel
NARAYANAN.V - coimbatore,இந்தியா
15-ஜூன்-202100:59:21 IST Report Abuse
NARAYANAN.V இதையெல்லாம் தமிழக அரசின் சாதனைகளில் ஒன்றாகச் சேர்க்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X