சீனாவில் வவ்வால்களிடம் இருந்து 24 கொரோனா வைரஸ்; ஆய்வில் அதிர்ச்சி

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
பெய்ஜிங்: வவ்வால்களில் இருந்து மொத்தம் 24 கொரோனா வைரஸ்களை சேகரித்துள்ளதாக சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்தது. இது பல்வேறு விதமாக உருமாறி 2வது, 3வது அலையாக சில நாடுகளில் வீரியமாகவும் பரவி வருகிறது. இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய வகை கொரோனா வைரஸ்களை காடுகளில்
NewCoronaVirus, Bat, China, சீனா, கொரோனா வைரஸ், வவ்வால்

பெய்ஜிங்: வவ்வால்களில் இருந்து மொத்தம் 24 கொரோனா வைரஸ்களை சேகரித்துள்ளதாக சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்தது. இது பல்வேறு விதமாக உருமாறி 2வது, 3வது அலையாக சில நாடுகளில் வீரியமாகவும் பரவி வருகிறது. இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய வகை கொரோனா வைரஸ்களை காடுகளில் இருந்து சேகரித்துள்ளதாக அறிவித்துள்ளனர். வவ்வால்கள் மத்தியில் எத்தனை கொரோனா வகைகள் உள்ளன என்பது குறித்தும் அதில் எத்தனை வகைகள் மனிதர்களுக்குப் பரவும் அபாயம் உள்ளது என்பது குறித்தும் கண்டறிய இது உதவும் எனச் சீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


latest tamil news


ஜெர்னல் செல் இதழில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரையில், ‛வவ்வால்களில் இருந்து மொத்தம் 24 கொரோனா வைரஸ்களை நாங்கள் சேகரித்துள்ளோம். அதில் நான்கு கொரோனா வகைகள் தற்போது பரவும் கோவிட்-19 வைரசுக்கு ஒத்து இருந்தது,' என அதில் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019 மே மாதம் முதல் 2020 நவம்பர் மாதம் வரை சீனாவின் சிறிய காடுகளில் வசிக்கும் வவ்வால்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. வவ்வால்களின் கழிவு மற்றும் வாயிலிருந்து எடுக்கப்பட்ட எச்சில்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
14-ஜூன்-202100:52:05 IST Report Abuse
மதுரை விருமாண்டி கும்பமேளாவில் வவ்வால் கறி விருந்து போட்டார்களா? இந்த போடு போட்டதே..
Rate this:
Cancel
13-ஜூன்-202122:46:14 IST Report Abuse
இந்திய தமிழன் ஏண்டா பேமானிகலா புதுக்கதை ஆரம்பிக்கிறீர்கள்
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
13-ஜூன்-202121:56:06 IST Report Abuse
Rajagopal ஆறு மாதங்களுக்கு ஒரு தரம் ஒவ்வொரு வைரசாக உலகுக்கு வழங்க இருக்கிறார்கள். சனத்தொகை பெருகி விட்டதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டாமா? போர்கள் தொடுக்காமல், இரத்தம் சிந்தாமல், காந்திய வழியில் உலகின் நல்வாழ்வைக்கருதி சீனாக்காரன் இந்த நற்பணியை செய்கிறான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X