அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஹைட்ரோ கார்பன் திட்டம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
சென்னை: புதுக்கோட்டையில் வடதெரு கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஏல அறிக்கையை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: காவிரி படுகையை பாதுகாப்பதில் அரசு உறுதிபூண்டு உள்ளது. கடந்த ஜூன்10ம் தேதி மத்திய பெட்ரோலிய அமைச்சகம், நாடு முழுவதும் 75
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

சென்னை: புதுக்கோட்டையில் வடதெரு கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஏல அறிக்கையை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: காவிரி படுகையை பாதுகாப்பதில் அரசு உறுதிபூண்டு உள்ளது. கடந்த ஜூன்10ம் தேதி மத்திய பெட்ரோலிய அமைச்சகம், நாடு முழுவதும் 75 பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுக்கும் திட்டங்களை செயல்படுது்த ஏலம் விடுவதாக ஒரு அறிவிக்கை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில், காவிரி படுகை பகுதியில் வடதெரு என்ற பகுதியும் சேர்க்கப்பட்டு உள்ளது. ஹைட்ரோ கார்பன் உற்பத்திக்காக ஆழ்குழுாய் கிணறுகளை அமைத்தால், வளமான காவிரி படுகை பகுதியில் உள்ள விவசாய மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகும். இந்த படுகை மற்றும் அதுனை சுற்றி உள்ள மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் உற்பத்தி செய்யும் ஆழ்குழாய்க் கிணறுகளை அமைக்க கூடாது என்பது தமிழக அரசின் கொள்கை.


latest tamil news




மேற்குறிப்பிட்ட ஏலத்தில்இருந்து வடதெரு பகுதியை நீக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் தமிழகத்தின் எந்த பகுதியையும் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டு வரக்கூடாது என பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளேன். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்ய தேவைப்படும் அனுமதிகளை தமிழக அரசு ஒரு போதும் வழங்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜூன்-202112:32:42 IST Report Abuse
ஆரூர் ரங் மீத்தேனை ஹைட்ரகார்பன்😇 பட்டியலிலிருந்து வேதியியல் அறிஞர்😎 ஸ்டாலின் நீக்கிவிட்டார்
Rate this:
Cancel
Ganapathy Subramanian - Muscat,ஓமன்
14-ஜூன்-202111:26:07 IST Report Abuse
 Ganapathy Subramanian ஷா கமிசன் அறிக்கையை கட்டுமரம் இந்த அறிக்கையில் நடவடிக்கை எடுக்க முகாந்திரமில்லை என்று குறிப்பெழுதி அதை மூடிவிட்டதை போல, இவர் கையெழுத்து போட்ட மீத்தேன் திட்டம் இப்போது அவசியமில்லை என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி தன்மேல் குற்றம் எல்லை என்று காட்டிக்கொள்கிறார்.
Rate this:
Cancel
14-ஜூன்-202109:50:33 IST Report Abuse
S.V ராஜன்(தேச பக்தன்...) தமிழகத்தில் எந்த இடத்திலும் எடுக்க கூடாது ஏனெற்றால் விவசாயம் பாதிக்க கூடாது ஆனால் மற்ற மாநிலங்கள் விவசாயத்துக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் வெற்றிகரமாக நடைமுறை படுத்தினால் அந்த பலன்களில் தமிழகத்திற்கும் பங்கு தரவேண்டும்...இப்படிக்கு விடியலோ விடியல் மரண விடியல் நடத்தும் சுடாலின்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X