பவார்-கிஷோர் சந்தித்தாலும் 2024 ல் மோடி தான் பிரதமர்: பட்னாவிஸ்

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
மும்பை: சரத்பவார்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடந்தாலும் வரும் 2024 ல் நடைபெறும் பொது தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்று பிரதமராவார் என மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்து உள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் கட்சிகளுக்கு வெற்றி வியூகங்களை வகுத்து தரும் பிரசாந்த் கிஷோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேசிய வாத காங்கிரஸ்

மும்பை: சரத்பவார்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடந்தாலும் வரும் 2024 ல் நடைபெறும் பொது தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்று பிரதமராவார் என மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்து உள்ளார்.latest tamil news
ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் கட்சிகளுக்கு வெற்றி வியூகங்களை வகுத்து தரும் பிரசாந்த் கிஷோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை சந்தித்தார்.
இது குறித்து பட்னாவிஸ் கருத்து தெரிவித்து இருப்பதாவது:


எதிர்கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல்வேறு வியூகங்ளை வகுக்கலாம். இருந்த போதிலும் பிரதமர் மோடி மக்கள் மனதை ஆளுகின்றார். இதன் காரணமாக அவர் வரும் 2024 ம் ஆண்டு நடைபெறும் பொது தேர்தலில் மீண்டும் பிரதமராக பதவியேற்று மீண்டும் புதிய அரசாங்கம் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பிரசாந்த் கிஷோர் நடந்து முடிந்த மே.வங்கம் மற்றும் தமிழக சட்டசபை தேர்தல்களின் போது மம்தா மற்றும் தி.மு.க.,தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு ஆலோசகராக செயல்பட்டார். இதனையடுத்து மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார். இருவரும் முதன்முறையாக சந்தித்து பேசி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


latest tamil newsஇதனிடையே வரும் 2024 ம் ஆண்டில் நடைபெற உள்ள பார்லி.,பொது தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்துவற்காக மம்தா, பவார், கிஷோர் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வால்டர் - Chennai,இந்தியா
14-ஜூன்-202111:48:04 IST Report Abuse
வால்டர் மோடி தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார் என்று யாராவது சொன்னால் நன்றாக இருக்கும். ஏழு வருடங்கள் உருண்டோடி விட்டன. மோடி மோடி என்று ஒரு தனிமனித துதி பிஜேபி என்ற இயக்கத்தை காணாமல் செய்து விடும். மின்னல் மாதிரி பளிச்சுன்னு அடிச்சிட்டு மறைந்து விடும்.
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
14-ஜூன்-202111:36:28 IST Report Abuse
Narayanan ஜிஎஸ்டி வந்தால் விலை வாசிகள் குறையும் என்றார்கள் இல்லை . காஸ் மானியம் உங்களின் வங்கி கணக்கில் சேர்க்கப்படும் என்றார்கள் . அது கழுதை தேய்ந்து கட்டெறுன்பு ஆனது . அதுவும் இல்லை பெட்ரோலிய பொருட்களின் விலை விண்ணை தொட்டுவிட்டது . பலரும் வேண்டுகோள்விடுத்தும் கவனிப்பார் இல்லை என்றாகிவிட்டது . இப்படி நம்பிக்கையை இழக்க செய்தால் பிஜேபிக்கு வாய்ப்பில்லை . ஆனால் மீண்டும் ஒரு கூட்டணிதான் அமையும் . அப்படி அமையப்பெற்றால் அது நன்றாக இருக்காது . பிஜேபி தவறுகளை உணர்ந்து மக்களின் அரசாக வேலைசெய்தால் மட்டுமே வாய்ப்பு வரும் .
Rate this:
ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.)எனக்கு என்ன ஆசைன்னா எந்த ஒன்றிய அரசு அப்படியே நீடிச்சால், எல்லா மாநிலங்களிலும் மொழிவாரி இன வாரி கட்சிகள் வளர்ச்சி பெற பெரும் வாய்ப்பு உண்டு....
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
14-ஜூன்-202111:28:16 IST Report Abuse
Narayanan People will know only the party and their candidates, voting for them . people doesn't know about Kishore. How the vote has getting change as per his wish. I am fully confused > Can anyone explain the tactics ??? Than what is use of putting vote by voters.? BJP, TCP,DMK knew the tactics of Kishore. can any one come out with white paper??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X