பவார்-கிஷோர் சந்தித்தாலும் 2024 ல் மோடி தான் பிரதமர்: பட்னாவிஸ்| Dinamalar

பவார்-கிஷோர் சந்தித்தாலும் 2024 ல் மோடி தான் பிரதமர்: பட்னாவிஸ்

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (23)
Share
மும்பை: சரத்பவார்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடந்தாலும் வரும் 2024 ல் நடைபெறும் பொது தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்று பிரதமராவார் என மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்து உள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் கட்சிகளுக்கு வெற்றி வியூகங்களை வகுத்து தரும் பிரசாந்த் கிஷோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேசிய வாத காங்கிரஸ்

மும்பை: சரத்பவார்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடந்தாலும் வரும் 2024 ல் நடைபெறும் பொது தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்று பிரதமராவார் என மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்து உள்ளார்.



latest tamil news




ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் கட்சிகளுக்கு வெற்றி வியூகங்களை வகுத்து தரும் பிரசாந்த் கிஷோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேசிய வாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை சந்தித்தார்.
இது குறித்து பட்னாவிஸ் கருத்து தெரிவித்து இருப்பதாவது:


எதிர்கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல்வேறு வியூகங்ளை வகுக்கலாம். இருந்த போதிலும் பிரதமர் மோடி மக்கள் மனதை ஆளுகின்றார். இதன் காரணமாக அவர் வரும் 2024 ம் ஆண்டு நடைபெறும் பொது தேர்தலில் மீண்டும் பிரதமராக பதவியேற்று மீண்டும் புதிய அரசாங்கம் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பிரசாந்த் கிஷோர் நடந்து முடிந்த மே.வங்கம் மற்றும் தமிழக சட்டசபை தேர்தல்களின் போது மம்தா மற்றும் தி.மு.க.,தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு ஆலோசகராக செயல்பட்டார். இதனையடுத்து மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார். இருவரும் முதன்முறையாக சந்தித்து பேசி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


latest tamil news



இதனிடையே வரும் 2024 ம் ஆண்டில் நடைபெற உள்ள பார்லி.,பொது தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்துவற்காக மம்தா, பவார், கிஷோர் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X