பொது செய்தி

இந்தியா

ஆளில்லா குட்டி விமானத்தில் தடுப்பூசி 'சப்ளை' செய்ய திட்டம்

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:மத்திய அரசு, மலை பிரதேசங்களில் வசிப்போருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க, முதன் முறையாக, 'டிரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. சரியான சாலை வசதிகள் இல்லாத மலை பிரதேசங்கள், குக்கிராமங்கள் ஆகியவற்றில் வசிப்போருக்கும், டிரோன்கள் மூலம் கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அனுமதிஇது குறித்து மத்திய அரசு
 ஆளில்லா ,குட்டி விமானம், தடுப்பூசி, 'சப்ளை' ,திட்டம்

புதுடில்லி:மத்திய அரசு, மலை பிரதேசங்களில் வசிப்போருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க, முதன் முறையாக, 'டிரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

சரியான சாலை வசதிகள் இல்லாத மலை பிரதேசங்கள், குக்கிராமங்கள் ஆகியவற்றில் வசிப்போருக்கும், டிரோன்கள் மூலம் கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அனுமதிஇது குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: டிரோன்கள் வாயிலாக தடுப்பூசி மருந்து வினியோகம் செய்வது தொடர்பாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், கான்பூர், ஐ.ஐ.டி., உடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வு வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து, டிரோன்கள் வாயிலாக தடுப்பூசி வினியோகம் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, மத்திய அரசுக்காக கொரோனா தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்யும், எச்.எல்.எச்., 'இன்ப்ரா டெக் சர்வீசஸ் நிறுவனம், டிரோன்கள்' மூலம் மலை பிரதேசங்களில் தடுப்பூசி மருந்தை வினியோகிக்க, ஒப்பந்த புள்ளி வெளியிட்டுள்ளது.
இந்த சேவையை மேற்கொள்ள, தெலுங்கானா மாநில அரசு விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து உள்ளது.இந்த திட்டத்தின்படி, 100 மீ., உயரத்தில், 35 கி.மீ., துாரம் வரை, 4 கிலோ தடுப்பூசி மருந்துகளை, டிரோன்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். ஒப்புதல்'பாராசூட்' பயன்படுத்த அனுமதியில்லை.

ஒப்பந்த புள்ளிகள் இறுதி செய்யப்பட்ட உடன், இந்திய விமான போக்குவரத்து ஆணையத்தின் ஒப்புதல் பெற்று, டிரோன்கள் வாயிலாக குக்கிராமங்களுக்கும் தடுப்பூசி அனுப்பும் பணி துவங்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
14-ஜூன்-202108:08:17 IST Report Abuse
blocked user பாதுகாப்பை கருத்தில் கொண்டு இது போன்ற தொழில்நுணுக்கங்களை உள்ளூரில் உருவாக்குவது மிக மிக அவசியம். அதாவது இதன் இதயம் / மென்பொருள் ஐஓடி என்று சொல்வாகள். அதை வைத்து ஏறாளமான தகவல்களை சேகரிக்க முடியும். சீனத்தயாரிப்பு என்றால் அவற்றை கட்டுப்படுத்தக்கூட முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X