பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி வழிகாட்டுதல் தெளிவில்லை: தனியார் மருத்துவமனைகள் அதிருப்தி

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி:'கொரோனா தடுப்பூசி கொள்முதல் தொடர்பாக, மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்கள் தெளிவாக இல்லை' என, தனியார் மருத்துவமனைகள் கூறி உள்ளன.மத்திய அரசின் சார்பில் கொரோனா தடுப்பூசி கொள்முதல் தொடர்பான புதிய கொள்கை முடிவுகளை சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.கோரிக்கைஇந்த வழிகாட்டுதல்கள், தடுப்பூசி கொள்முதல் செய்வதை தெளிவுபடுத்துவதாக இல்லை என,
Corona Vaccine, Private Hospitals, Covid Vaccine

புதுடில்லி:'கொரோனா தடுப்பூசி கொள்முதல் தொடர்பாக, மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல்கள் தெளிவாக இல்லை' என, தனியார் மருத்துவமனைகள் கூறி உள்ளன.

மத்திய அரசின் சார்பில் கொரோனா தடுப்பூசி கொள்முதல் தொடர்பான புதிய கொள்கை முடிவுகளை சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.


கோரிக்கை

இந்த வழிகாட்டுதல்கள், தடுப்பூசி கொள்முதல் செய்வதை தெளிவுபடுத்துவதாக இல்லை என, தனியார் மருத்துவமனைகள் கூறி உள்ளன.இதனால் தங்கள் மருத்துவமனைகளில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் அவை கூறி உள்ளன.எனவே, தடுப்பூசி கொள்முதலில் முறையான வழிகாட்டுதல்களுடன், ஒற்றை சாளர முறையை பின்பற்ற வேண்டும் என, அவை கோரிக்கை விடுத்துள்ளன.

இதற்கிடையே, தனியார் மருத்துவ மனைகளுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகளை, தங்கள் உத்தரவு வரும்வரை நிறுத்தி வைத்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறைக்கு, 'கோவிஷீல்டு' தயாரிக்கும், 'சீரம் இன்ஸ்டிடியூட்' கடிதம் எழுதி உள்ளது.


பிரச்னை

இதுபற்றி, டில்லி பாத்ரா மருத்துவமனை இயக்குனர், டாக்டர் குப்தா கூறியதாவது:நாங்கள் எவ்வாறு தடுப்பூசி கொள்முதல் செய்வது என்பதில், தெளிவான வழிகாட்டுதல் இல்லாதது பிரச்னையாக இருக்கிறது.மாநில அரசிடம் கேட்டால், கொள்கை முடிவுகள் இறுதி செய்யப் படவில்லை என்பதால், 21ம் தேதி வரை காத்திருக்க வேண்டும் என்கின்றனர். மத்திய அரசும் இதையே கூறுகிறது.


தாமதம்

இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தாமதமாகின்றன. மூன்றாம் அலைக்குள், அதிக நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என, நினைக்கிறோம். சுகாதார பணியாளர் கள் உள்ளிட்ட பலரும், இரண்டாம் 'டோஸ்' கிடைக்காமல் காத்திருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
14-ஜூன்-202116:15:55 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\சுகாதார பணியாளர் கள் உள்ளிட்ட பலரும், இரண்டாம் 'டோஸ்' கிடைக்காமல் காத்திருக்கின்றனர். .......\\ ........ அவங்களுக்குத்தானே முதலிலே தடுப்பூசி போடப்பட்டது ......... அப்பறம் எப்படி ரெண்டாவது டோஸ் கிடைக்காமல் காத்திருக்கின்றனர் ? சுத்தமா புரியலே .........
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
14-ஜூன்-202113:11:44 IST Report Abuse
Sridhar முதல்ல கொரோனா வந்தபோது இவிங்களுக்கு இரண்டாவது அலை பற்றி தெரியல. 'இரண்டாவது' அலை வந்தவுடன் உடனே பெரிய நிபுணர்கள் போல் 'மூன்றாவது' அலையை பற்றி கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்கள். கொரோனாவால் விளைந்த நன்மைகளில் ஒன்று மருத்துவத்துறையின் ஓட்டைகளை வெளிச்சம்போட்டு காட்டியது. தங்கள் உயிரையும் பணயமாக வைத்து வேலை செய்யும் மருத்துவ பணியாளர்கள் இம்மாதிரியான ஒரு அமைப்பை நம்பி இயங்குகிறார்களே என நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
14-ஜூன்-202112:14:44 IST Report Abuse
Balaji சும்மா ஏதாவது கெளர வேண்டீது.. ரெண்டு இந்திய கம்பெனிகள் விற்கின்றன.. ஆர்டர் செய்து வாங்கி மக்கள் வந்தால் போடுங்கள் அவ்வளவு தான்.. போடும்போது அதை கோவின் இணையதளத்தில் பதிவு செய்யுங்கள்.. முடிஞ்சிபோச்சி.. போட்டுக்க ஆளு வரல அதான் இந்த கூவு கூவுறானுங்க... வாங்குனதெல்லாம் வீணாவுதோ என்னமோ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X