பொது செய்தி

இந்தியா

செலவினங்களை 20 சதவீதம் குறையுங்க: அமைச்சகங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான செலவு அதிகரித்துள்ள நிலையில், தவிர்க்கக் கூடிய செலவினங்களில் 20 சதவீதத்தை குறைக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும், தடுப்பூசி வழங்கவும், மத்திய அரசு பெரும் தொகையை செலவிட்டு வருகிறது.நாட்டில்
அமைச்சகங்கள், மத்திய அரசு, சுற்றறிக்கை

புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான செலவு அதிகரித்துள்ள நிலையில், தவிர்க்கக் கூடிய செலவினங்களில் 20 சதவீதத்தை குறைக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும், தடுப்பூசி வழங்கவும், மத்திய அரசு பெரும் தொகையை செலவிட்டு வருகிறது.நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசு விலை கொடுத்து வாங்குகிறது. அதை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்குகிறது.இதைத் தவிர, பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ள ஏழை மக்களுக்கு, ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.


நடவடிக்கை

இது, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நவ., வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்காக, 1.45 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட உள்ளது.கொரோனா வைரஸ் பரவல் கடந்தாண்டு தீவிரமாக இருந்தபோது, சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள, அனைத்து அமைச்சகங்கள், துறைகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இதன்படி, நிபுணர்கள் நியமனம், விழாக்கள், வெளிநாடுகளில் இருந்து அச்சு காகிதங்கள் வாங்குவது போன்ற முக்கியத்துவம் அதிகம் இல்லாத செலவுகளை கட்டுப்படுத்த உத்தரவிடப்பட்டது.

தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக உள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசிக்கான செலவை அதிகரித்துள்ளது. இதையடுத்து, கட்டுப்படுத்தக்கூடிய செலவினங்களில் 20 சதவீதத்தை குறைக்கும்படி, அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டில், கட்டுப்படுத்தக்கூடிய செலவினங்களில் 20 சதவீதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2019 - 2020ம் ஆண்டுக்கான செலவின ஒதுக்கீட்டை அடிப்படை ஆக வைத்து, செலவு குறைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.'ஓவர் டைம்'குறிப்பாக, 'ஓவர்டைம்' எனப்படும் கூடுதல் நேர பணிக்கான படிகள், பரிசுகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்கள், அலுவலக செலவினங்கள், வாடகை, 'ராயல்டி' எனப்படும் உரிமத் தொகை போன்றவற்றில் செலவுகளை குறைக்கலாம்.

பதிப்பு செலவு, இதர அலுவலக செலவுகள், விளம்பரம், பராமரிப்பு செலவு போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா தடுப்பு தொடர்பான செலவினங்கள், இந்த சிக்கன நடவடிக்கையில் வராது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
14-ஜூன்-202121:54:26 IST Report Abuse
மதுரை விருமாண்டி வசந்த மாளிகை தொடரும்.. மத்தவங்க செலவை குறைங்க..
Rate this:
Cancel
mothibapu - Prayagraj,இந்தியா
14-ஜூன்-202112:13:48 IST Report Abuse
mothibapu முதலில் வருமானவரிகளை நிறுத்துங்கள். எல்லா பொருட்களில்/சேவைகளில் வரி போட்டுவிடுகிறீர்கள் மேலும் வருமானத்தில் வரி சுமை எதற்கு? நடுத்தர மக்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளனர். எப்போதும் ஏழை பணக்காரர்களை மட்டும் பார்க்காதீர்கள்.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
14-ஜூன்-202111:50:44 IST Report Abuse
g.s,rajan நமது நாட்டின் முதல் குடிமகனாக விளங்கும் ஜனாதிபதி முதல் மத்திய மாநில அமைச்சர்கள் எம்பிக்கள் எம் எல் ஏக்கள்போன்றவர்கள் செய்யும் ஆடம்பர செலவுகள் மக்கள் வரிப்பணத்தில் செய்யும் அனாவசிய செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் ,அரசியல்வாதிகளுக்கு ஊர் சுத்த அரசாங்கத்திடம் இருந்து ஓசி பெட்ரோல் மற்றும் டீசல் கிடையாது என்று மிகவும் கண்டிப்பாக சொல்லி விடவேண்டும் .ஆடம்பரத்தை நிச்சயம் ஊக்குவிக்கக் கூடாது ,அப்படி செல்வதானால் தங்கள் சொந்த செலவில் எரிபொருள் போட்டுக் கொண்டு செல்லட்டும் தவறில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X