அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வரின் இரட்டை வேடம்: வறுத்தெடுக்கும் 'நெட்டிசன்'கள்!

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (68)
Share
Advertisement
சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, 'டாஸ்மாக்' கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்திய ஸ்டாலின், முதல்வரானதும், 'டாஸ்மாக்' கடைகளை திறக்க உத்தரவிட்டது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டில், ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பான 'வீடியோ'க்களை வெளியிட்டு, 'சொன்னது நீ தானா' என, 'நெட்டிசன்'கள்கலாய்த்து

சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, 'டாஸ்மாக்' கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்திய ஸ்டாலின், முதல்வரானதும், 'டாஸ்மாக்' கடைகளை திறக்க உத்தரவிட்டது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டில், ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பான 'வீடியோ'க்களை வெளியிட்டு, 'சொன்னது நீ தானா' என, 'நெட்டிசன்'கள்கலாய்த்து வருகின்றனர்.latest tamil news

அ.தி.மு.க., அரசு


தமிழகத்தில், கடந்த ஆண்டு மே முதல் வாரத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 3,000; உயிரிழப்புகள், 30 ஆக இருந்தன. அப்போது, சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர, மற்ற பகுதிகளில், மே 7 முதல் 'டாஸ்மாக்' கடைகளை திறக்க, அ.தி.மு.க., அரசு அனுமதி அளித்தது.இதற்கு அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த, தற்போதைய முதல்வர் ஸ்டாலின், கடும் கண்டனம் தெரிவித்தார்.

அப்போது பேட்டி அளித்த அவர், 'மே 7 முதல் மதுபான கடைகளை திறக்கப் போவதாக அரசு அறிவித்திருக்கிறது. மக்கள் அதிகம் கூடக்கூடாது என, சொல்வதும் அரசு தான்; மதுக்கடைகளை திறந்து வைப்பதும் அரசு தான்.'அரசு போட்ட சட்டத்தை, அரசே மீறச் சொல்கிறது. எந்த நோய் தொற்று பரவக்கூடாது என்று நினைக்கிறோமோ, அது, இந்த அரசின் நடவடிக்கையால், அதிகமாக பரவப்போகுது' என்றார்.


latest tamil news

ஆர்ப்பாட்டம்


மேலும், டாஸ்மாக் கடைகள் திறப்பை கண்டித்து, தி.மு.க., சார்பில், அவரவர் வீட்டின் முன் கறுப்புக்கொடி ஏந்தி, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஸ்டாலின் தன் வீட்டின் முன் குடும்பத்தினருடன்,கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.அப்போது, 'தமிழக அரசே, மதுக்கடைகளை இழுத்து மூடு. தேவையா, தேவையா, கொள்ளை நோய்க்கு மக்கள் எல்லாம் கொத்து கொத்தாய் சாகும் போது, மந்திரி கல்லா கட்ட, மதுக்கடைகள் தேவையா...'திறக்காதே திறக்காதே தமிழக அரசே திறக்காதே; சட்டம் -- ஒழுங்கை சீர்குலைக்கும் மதுக்கடைகளை திறக்காதே' என, கோஷம் எழுப்பினார்.

அவரது மகன் உதயநிதி, சகோதரி கனிமொழி ஆகியோரும், தங்கள் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். இது நடந்தது கடந்த ஆண்டு. இந்த ஆண்டு தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றது; ஸ்டாலின் முதல்வரானார். கொரோனா தொற்று பரவல், கடந்த ஆண்டை விட தற்போது அதிகமாக உள்ளது. கட்சிகள் மவுனம்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, தினமும் 15 ஆயிரத்துக்கு மேல் உள்ளது; உயிரிழப்பும் 350க்கு மேல் உள்ளது. முழு ஊரடங்கு, வரும் 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


latest tamil newsஇந்நிலையில், சென்னை உட்பட 27 மாவட்டங்களில், இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது, மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஆட்சியில் இல்லாதபோது ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்ததும் ஒரு நிலைப்பாடு என்ற நிலை, மக்களிடம் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. முதல்வரின் நடவடிக்கையை, சமூக வலைதளங்களில், பல தரப்பினரும் கண்டித்து வருகின்றனர்.

அ.தி.மு.க., ஆட்சியில், டாஸ்மாக் கடைகளை திறந்தபோது, கொதித்தெழுந்த தி.மு.க., கூட்டணி கட்சிகள், தற்போது வாய்மூடி மவுனமாக உள்ளன.எதிர்கட்சி தலைவராக இருந்த போது, ஸ்டாலின் நடத்திய ஆர்ப்பாட்ட வீடியோக்களை, சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து, 'சொன்னது நீ தானா...' என, கேள்வி எழுப்பியுள்ளனர். தி.மு.க.,வின் இரட்டை வேடம் எனக்கூறி, கடந்த ஆண்டு, உதயநிதி, கனிமொழி ஆகியோர், டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக பகிர்ந்த டுவிட்டர் பதிவு, பேட்டி போன்றவற்றை, 'நெட்டிசன்'கள் பதிவிட்டும், கலாய்த்து வருகின்றனர்.

பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் மட்டும் திறக்கப்படுவது தொடர்பாக, பல்வேறு, 'மீம்ஸ்'களை பதிவிட்டு வருகின்றனர்.


'தொற்று அதிகமானால் அரசே பொறுப்பு'


பா.ஜ., மாநில பொதுச் செயலர் கே.டி.ராகவன் அளித்த பேட்டி: 'தொற்று அதிகம் பாதித்த, 11 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற இடங்களில் தான், இன்று, 'டாஸ்மாக்' கடைகள் திறக்கப்படுகின்றன' என, சொல்கின்றனர். கூடவே, 'டாஸ்மாக் வழியாக அரசுக்கு வருமானம் வருகிறது. அதை மூடி விட்டால், நிதிச்சுமை தாங்க முடியாத அளவுக்கு சென்று விடும்' என்றும், அரசு தரப்பில் கூறப்படுகிறது.

கடன் சுமையை சமாளிக்க வேறு வழிகளைத் தான் தேட வேண்டும். உயிரை அழிக்கும், 'டாஸ்மாக்' வருமானத்தை நோக்கி செல்லக் கூடாது. அண்டை மாநிலங்களில் மதுக்கடைகளை திறந்து விட்டனர்; அதனால், தமிழகத்திலும் திறக்கிறோம்' என, சமாதானம் கூறுகின்றனர். டாஸ்மாக் கடைகளால் கொரோனா தொற்று மீண்டும் அதிகமானால், அதற்கு தமிழக அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
19-ஜூன்-202122:04:02 IST Report Abuse
madhavan rajan இதெல்லாம் திமுகவில் சாதாரணமப்பா . 1967 ல் இருந்து திமுகவும் பொய் வாக்குறுதி கொடுத்து தேர்தலில் வெற்றி பெறுகிறது. மக்கள் முட்டாளாக இருந்தால் ஏமாற்றுகிற கட்சிக்கு கொண்டாட்டம்தான்.
Rate this:
Cancel
rishi - varanasi,இந்தியா
19-ஜூன்-202112:00:29 IST Report Abuse
rishi அமெரிக்கா வாழ் நிதி அமைச்சர் என்ன பண்ணுகிறார், வாய் சவடால் விட்டுகிட்டு இர்ருக்கறார், டாஸ்மாக் வருமானம் அரசுக்கு தேவை என்றால் உங்கள் நிவாரணம் மக்களுக்கு தேவையில்லை, நிவாரணம் கொடுக்காமல் டாஸ்மாக் மூடியே இருக்கட்டும், ஒருபக்கம் நிவாரணம், இநோருபக்கம் டாஸ்மாக், உங்க தில்லு முள்ளு கழகத்தின் வேட்டை ஆரம்பம் ஆகிவிட்டதா?
Rate this:
Cancel
Abdul Aleem - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜூன்-202110:54:41 IST Report Abuse
Abdul Aleem எல்லோரையும் குடிக்க வேண்டாம் என்று சொல்லுங்க குடிக்கிறதாலதானே திறக்கிறார்கள் குடிமகன்களுக்கு முதல்வருக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள் அவர்களுடைய கோரிக்கையையும் எங்கள் தளபதி நிறைவேற்ற வேண்டாமா நெட்டிசன்கள் டாஸ்மாக் திறக்க வேண்டாம் என்று சொல்வதை விட குடிகாரர்களுக்கு சொல்லுங்க குடிக்க வேண்டாம் என்று இல்லை என்றல் கள்ள சாராயம் பெருகும் பலபேர் கள்ளத்தனமாக விற்று சொத்து சேர்த்திடுவார்கள்
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
19-ஜூன்-202122:05:34 IST Report Abuse
madhavan rajanஇந்த நியாயமெல்லாம் அதிமுக ஆட்சி செய்யும்போது திமுக தலைவர்களுக்கு தெரியாதா? இவர்கள் ஜெயித்தபிறகுதான் இந்த ஞானோதயம் பிறந்ததா? அல்லது திமுகக்காரர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சுவார்கள் என்று கூறுகிறீர்களா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X