காங்.,கில் சீர்திருத்தம் தேவை: கபில் சிபல் வலியுறுத்தல்

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி:''இன்னும் செயலற்று போகவில்லை என்பதை நிரூபிக்க, காங்.,கில் அனைத்துநிலைகளிலும் விரிவான சீர்திருத்தம் செய்ய வேண்டும்,'' என, அதிருப்தி தலைவர் கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்.'காங்.,குக்கு நிரந்தர தலைமை வேண்டும்; கட்சியில் சீர்திருத்தம் தேவை' என, மூத்த தலைவர்கள், குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உட்பட, 23 பேர், கட்சி தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
காங்.,கில், சீர்திருத்தம்,கபில் சிபல் ,வலியுறுத்தல்

புதுடில்லி:''இன்னும் செயலற்று போகவில்லை என்பதை நிரூபிக்க, காங்.,கில் அனைத்துநிலைகளிலும் விரிவான சீர்திருத்தம் செய்ய வேண்டும்,'' என, அதிருப்தி தலைவர் கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்.

'காங்.,குக்கு நிரந்தர தலைமை வேண்டும்; கட்சியில் சீர்திருத்தம் தேவை' என, மூத்த
தலைவர்கள், குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உட்பட, 23 பேர், கட்சி தலைவர் சோனியாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதனால், கட்சியில் அவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கபில் சிபல் கூறியுள்ளதாவது:பா.ஜ.,வுக்கு மாற்றாக வலுவான கட்சி எதுவும் இல்லை என்ற நிலை உருவாகிஉள்ளது.ஆனால், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பில், பிரதமர் நரேந்திர மோடி தோல்வி அடைந்து விட்டார்.சமீபத்தில் நடந்த பல மாநில சட்டசபை
தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இதில் இருந்து வலுவாக இருந்தால், பா.ஜ.,வை வீழ்த்த முடியும் என்பது தெரிகிறது.அவ்வாறு வலுவானதாக காங்., மீண்டும் மாற வேண்டும். இன்னும் செயலற்று போகவில்லை என்பதை, நாட்டு மக்களுக்கும்,
கட்சியினருக்கும் உணர்த்த வேண்டும்.

அதற்கு, கட்சியில் அனைத்து நிலைகளிலும், விரிவான சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். விரைவில் இது நடக்கும் என, நம்புகிறோம்.தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆராய குழு அமைக்கப்படுகிறது. ஆனால், குழு அளிக்கும் பரிந்துரைகள் செயல்படுத்தப்படுவதில்லை.
தீவிர மதவாதம் எந்த அளவுக்கு ஆபத்தோ, அந்தளவுக்கு ஆபத்து, சிறுபான்மையினர் ஆதரவு கொள்கையும். இதை, காங்., தலைமை உணர வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.kausalya - Chennai,இந்தியா
14-ஜூன்-202121:48:58 IST Report Abuse
S.kausalya காங்கிரஸ் செத்து போய் ரொம்ப நாள் ஆச்சு. பாடை. கட்டி ஆச்சு. வாத்தியார் வந்து காரியம் பண்ணி ஆச்சு. இப்ப வந்து காங்கிரஸ் செழித்து.வாழ வழி சொல்றார்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஜூன்-202119:19:59 IST Report Abuse
Endrum Indian அதில் வேண்டிய சீர்த்திருத்தங்கள் ரெண்டு 1) அது காங்கிரஸ் அல்லவே அல்ல???? பெயர் திருத்தம் 2) அந்த பப்பு குடும்பம் இத்தாலிக்கு செல்லவேண்டும். திருமணம் ஆகாத வக்கீலாக் இல்லாத ஒரு நல்லவன் பப்பு மாதிரி அல்லவே அல்ல தலைமை வகிக்க வேண்டும்
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
14-ஜூன்-202118:49:41 IST Report Abuse
a natanasabapathy கட்சியை கூண்டோடு களைத்து விடுவது தான் நாட்டுக்கு நல்லது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X