பொது செய்தி

தமிழ்நாடு

பெண்களை அர்ச்சகராக்கும் அரசின் முயற்சி சரியானதா?

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (65)
Share
Advertisement
சென்னை:'பெண்களை அர்ச்சகர்களாக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்' என்ற, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதற்கு, ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. ராமரவிக்குமார், இந்து தமிழர் கட்சி தலைவர்: ஹிந்து கோவில்களின் நிர்வாகம், அவரிடம் சிக்கிக் கொண்டதே தவிர, ஹிந்து ஆகம விதிகளில் தலையிடும் உரிமை, அவருக்கோ, அறநிலைய துறைக்கோ இல்லை. அதை, ஹிந்துக்கள்
பெண்களை அர்ச்சகராக்கும் அரசின் முயற்சி சரியானதா?

சென்னை:'பெண்களை அர்ச்சகர்களாக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்' என்ற, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதற்கு, ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.


ராமரவிக்குமார், இந்து தமிழர் கட்சி தலைவர்:

ஹிந்து கோவில்களின் நிர்வாகம், அவரிடம் சிக்கிக் கொண்டதே தவிர, ஹிந்து ஆகம விதிகளில் தலையிடும் உரிமை, அவருக்கோ, அறநிலைய துறைக்கோ இல்லை. அதை, ஹிந்துக்கள் உணர்த்தினால் நல்லது.ஹிந்து அமைப்புகள் நீதிமன்றங்கள் வழியே, தங்கள் மத உரிமையை காத்துக் கொள்வது நல்லது. கொரோனா காலத்தில், கோவில்கள் மூடி கிடக்கின்றன. வழிபாடுகள் நடந்தபோதும், வழிபாடு குறித்து அர்ச்சகர் குறித்து, எந்த ஹிந்துவும் இவரிடம் புகார் சொன்னதில்லை.

அப்படி இருந்தும், வீண் சிக்கலுக்கும், வெட்டி அரசியலுக்கும், வறட்டு குழப்பங்களுக்கும், அமைச்சர் வழிகோலுகிறார். இது, ஹிந்து கோவில் உரிமைகளுக்கு விடப்படும் மிரட்டல். இது மத துவேஷம் என்ற வகையில், மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மீனாட்சி நித்ய சுந்தர், தமிழக பா.ஜ., மகளிர் அணி செயலர்:

இந்திய சமூக கட்டமைப்பின் ஆணி வேராக, குடும்ப தலைவியாக இருந்து, குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், கடமையையும் பெண்ணிற்கு இருக்கிறது.அர்ச்சகர் பணியில் இருப்பது, கோடி கோடியாக சம்பாதிக்க அல்ல.

அது, புனிதப்பணி. கோவில்களில் பூஜை செய்கிறவர் என்றதும், அனைவரும் பிராமணர்கள் என்ற தவறான புரிதலும், எல்லாரிடமும் இருக்கிறது. அதுவும் கூட, எல்லா ஜாதியினரையும் அர்ச்சகராக்குகிறோம் என்பதற்கான அடிப்படை விஷயமாகும். நிஜத்தில் அப்படி இல்லை. எல்லா ஜாதிகளை சேர்ந்தவர்களும், பல கோவில்களில் இன்றைக்கும் அர்ச்சகர்களாக உள்ளனர்.

கோவில்களில் பெண்களையும், அர்ச்சகர்கள் ஆக்குகிறோம் என்று சொல்வது, கோவில்களுக்கு என, இருக்கும் வழிபாட்டு நெறிமுறைகள், பூஜை, நியதிகள் போன்ற அடிப்படை கட்டமைப்பை தகர்ப்பது போன்றது. காலையில் கோவிலுக்கு செல்லும் அர்ச்சகர், பல கால பூஜைகளுக்கு பின், இரவு நேரத்தில் தான் வீடு திரும்ப வேண்டும்.

இப்படிப்பட்ட நிலையில் இருந்து, ஒரு பெண்ணால் அதை செய்ய முடியுமா என்பது சந்தேகமே.சமூகத்தில் பெண்கள் முன்னேற்றம் பெற எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அவற்றை விட்டு விட்டு, கோவில் அர்ச்சகர் பணி என்பது, இப்போதைய சூழலில் அவசியமா என்பது தான் கேள்வி. அரசு, இவற்றை விட்டு விட்டு, நல்ல விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.


முருகன், தமிழக பா.ஜ., தலைவர்:

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்குவோம் என்ற தமிழக அரசின் அறிவிப்பை, பா.ஜ., வரவேற்கிறது. அதேநேரம் பழங்காலத்தில் இருந்து, பெண்கள் உட்பட அனைத்து ஜாதியினரும், கோவில்களில் அர்ச்சகர்களாக உள்ளனர்.தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள், பாடிகார்டு முனீஸ்வரர் கோவில், வத்தலகுண்டு இதமயன் கோவில் ஆகியவற்றில் பூஜை செய்கின்றனர். மேல்மலையனுார் அங்காள பரமேஸ்வரி கோவிலில் செம்படவர்கள்; விருதுநகர் ஆதிபராசக்தி கோவிலில் நாடார்கள்; திருச்சி உக்ரகாளியம்மன் கோவிலில் வெள்ளாளர்கள். சின்னசேலம் பீரங்கி அய்யனார் கோவில், கல்வன்தங்கம் அங்காளம்மன் கோவில், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்கோவில் ஆகியவற்றில் வன்னியர்கள் என, பல்வேறு கோவில்களில், வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பூஜை செய்து வருகின்றனர்.

மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலில், பெண்கள் பூஜை செய்கின்றனர். ஏற்கனவே அனைத்து சமுதாயத்தினரும், பெண்களும், தமிழகத்தில் அர்ச்சகர்களாக உள்ளனர். எனவே, சரியான அறிவு, ஆமக சாஸ்திரங்களை அறிந்தவர்களை, அர்ச்சகர்களாக நியமிப்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், திருநங்கையரையும் அர்ச்சகராக நியமிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வி.சி., கட்சி எம்.பி., ரவிக்குமார், அமைச்சர் சேகர்பாபுவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram Ram - கொங்கு நாடு,இந்தியா
15-ஜூன்-202102:52:08 IST Report Abuse
Ram Ram இந்து மதத்தில் மட்டும் இதை திணிக்க முடியாது . ஆபிரகாமிய மதங்களிலும் இதே நடைமுறையை அரசு அமல்படுத்த வேண்டும் , செய்வார்களா ?
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
14-ஜூன்-202121:40:25 IST Report Abuse
s t rajan முஸ்லீம் மசூதிகளில் முதலில் பெண்களை அனுமதியுங்கள். அரபி, உருது மொழியில் பிரார்த்தனைகளை நிறுத்தி விட்டு தமிழில் ப்ரார்த்தனை செய்ய உத்தரவு போட முடியுமா ? அதைப் போல் க்ருத்துவ, முஸ்லீம் மக்களின் அனைத்து வர்க்கங்களும் மத போதும், இமாம், பாஸ்டர், பாதிரியார் ஆக முடியுமா ? நாட்டில் பசி, பிணி, நோய் தீர்த்தல், வேலை வாய்ப்பு போன்ற முக்கியமான வற்றை கவனிக்காமல், இப்படி ஒரே ஒரு சமூகத்தை, அதுவும் மொத்த ஜனத்தொகையில் 3% கூட இல்லாத ப்ராமண வர்க்கத்தின் மேல் வன்மம் காட்டுகிறீர்களே ? திருமதி துர்கா அவர்கள் அழைத்தால் மட்டும் ப்ராமணர்கள் உங்களைத் தேடி வந்து ஆசீர்வாதம் செய்யணுமா ? மனசாட்சி என்று ஒன்று திமுகவினருக்கு கிடையாதா ?
Rate this:
ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.)நீ பிறந்த வீட்டை முதலில் சுத்தமாக தூய்மாயாக வைத்திரு பிறகு அடுத்தவர்க்கு அறிவுரை சொல்லலாம்....
Rate this:
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
14-ஜூன்-202121:08:08 IST Report Abuse
mrsethuraman  அடுத்தது சக்கரை பொங்கலுக்கு பதில் சிக்கன் பிரியாணி ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X