மேற்கு வங்க அமைச்சர் புகார்; மத்திய அரசு மறுப்பு

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி-ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், தன்னை பேச விடாமல் செய்ததாக, மேற்கு வங்க நிதிஅமைச்சர் அமித் மித்ரா கூறிய புகாரை, மத்திய அரசு மறுத்துள்ளது.டில்லியில் நேற்று முன்தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது. இதையடுத்து, மேற்கு வங்க நிதி அமைச்சரும், திரிணமுல் காங்., மூத்த

புதுடில்லி-ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், தன்னை பேச விடாமல் செய்ததாக, மேற்கு வங்க நிதிஅமைச்சர் அமித் மித்ரா கூறிய புகாரை, மத்திய அரசு மறுத்துள்ளது.



latest tamil news


டில்லியில் நேற்று முன்தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்தது. இதையடுத்து, மேற்கு வங்க நிதி அமைச்சரும், திரிணமுல் காங்., மூத்த தலைவருமான அமித் மித்ரா, நிர்மலா சீதாராமனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தின் முடிவில், நான் பரிந்துரைத்த பல விஷயங்கள் குறித்து நீங்கள் பேசினீர்கள்.

அதற்கு பதில் அளிப்பதற்கு வாய்ப்பு கோரியபோது வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் என் பரிந்துரைகளை நிராகரிக்கும்படி உ.பி., அமைச்சர் கோரியபோது, அவருக்கு நீங்கள் வாய்ப்பளித்தது எனக்கு அதிர்ச்சி அளித்தது. என்னை பேச விடாமல் செய்ததுடன், கூட்டத்தை முடித்து, 'வீடியோ கான்பரன்ஸ்' இணைப்பும் துண்டிக்கப்பட்டது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news


இதற்கு மறுப்பு தெரிவித்து, மத்திய நிதி துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் வெளியிட்ட 'டுவிட்டர்' பதிவு:ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் அமித் மித்ரா உட்பட அதிருப்தியாளர்கள் கருத்து கூறுவதை, நிர்மலா சீதாராமன் தடுக்கவில்லை. நடக்காத ஒன்றை நடந்ததாக கூறுவது, கவுன்சிலின் மூத்த உறுப்பினராக உள்ளவரின் தகுதிக்கு அழகல்ல. அனைத்து மாநில அமைச்சர்களுடன் ஆரோக்கியமான முறையில் விவாதம் நடந்தது. மித்ராவின் வீடியோ வேகம், தரம் ஆகியவற்றின் குறைபாட்டால், பேச்சு சரிவர கேட்காமல், இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜூன்-202113:32:23 IST Report Abuse
பாமரன் தோபார்ரா... டெக்னிக்கல் ஃபால்ட் அப்பிடின்னு புது ஐட்டமா சிக்கியிருக்கு...🤭🤭 இனிமேல் இதை வச்சு ஓட்டுவாங்களோ...🤔🤔 ஆடத்தெரியாத....
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஜூன்-202113:13:55 IST Report Abuse
Pugazh V வீடியோ லிங்க் வரத் தாமதித்தால் கொஞ்சம் காத்திரந்து தான் எல்லா அலுவலக மீட்டிங்குகள் நடக்கின்றன.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஜூன்-202110:23:21 IST Report Abuse
Pugazh V இந்த செய்தியின் போட்டோவில் யூனியன் மினிஸ்டர் என்று தானே போடுகிறார்கள். சென்ட்ரல் மினிஸ்டர் என்றா போடுகிறார்கள்? அப்புறம் ஏன் "ஒன்றிய" என்றால் தமிழக பாஜகவினருக்கு அதிருது?? யோசித்து பதில் தரவும். நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X