பொது செய்தி

இந்தியா

கேரளாவின் அரிய வகை தவளைக்கு அங்கீகாரம் கிடைக்குமா?

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
திருவனந்தபுரம்- வாழ்நாள் முழுதும் பூமிக்குள் வாழும் அபூர்வ இன தவளை இனம் அழியாமல் பாதுகாக்க, அதை மாநில தவளையாக அறிவிக்க, கேரள வனத்துறை, அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.கேரளாவில் அபூர்வ இனமான, 'பர்ப்பிள் தவளை' எனப்படும், பன்றி மூக்கு தவளையை 2003ல் டில்லி பேராசிரியர் பிஜூ, முதன்முறையாக இடுக்கியில் கண்டுபிடித்தார். இது பற்றி 2017ல் வன ஆராய்ச்சியாளர் சந்தீப்தாஸ்

திருவனந்தபுரம்- வாழ்நாள் முழுதும் பூமிக்குள் வாழும் அபூர்வ இன தவளை இனம் அழியாமல் பாதுகாக்க, அதை மாநில தவளையாக அறிவிக்க, கேரள வனத்துறை, அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.



latest tamil news


கேரளாவில் அபூர்வ இனமான, 'பர்ப்பிள் தவளை' எனப்படும், பன்றி மூக்கு தவளையை 2003ல் டில்லி பேராசிரியர் பிஜூ, முதன்முறையாக இடுக்கியில் கண்டுபிடித்தார். இது பற்றி 2017ல் வன ஆராய்ச்சியாளர் சந்தீப்தாஸ் மேற்கொண்ட ஆராய்ச்சிக்கு, லண்டன் விலங்கியல் பவுண்டேஷன் விருது வழங்கியது.

வாழ்நாள் முழுதும் பூமிக்கடியில் வாழும் இத்தவளைகள், ஒவ்வொரு ஆண்டும் மழைகாலங்களில் மட்டும் வெளியில் வந்து இனப் பெருக்கம் செய்யும். சில நாட்களில் மீண்டும் பூமிக்குள் சென்று விடும். பெரிய உடம்பு, சிறிய கால்கள், சிறிய தலை, உதடுகளை உடையது. 170 கிராம் எடையும், 6 - 9 செ.மீ. நீளமும் உடையது.பூமிக்கடியில் உள்ள புழு, பூச்சிகளை தன் நீண்ட நாக்கால் கவர்ந்து உணவாக்கி கொள்ளும். 'இதன் வாழ்க்கை முறை மர்மம் நிறைந்தது, முழுமையாக தெரிந்து கொள்ள முடியவில்லை' என, ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


latest tamil news



பரிந்துரை

கேரளாவில் பெரியாறு புலிகள் சரணாலயம், தமிழகத்தில் ஆனைமலை புலிகள் சரணாலய பகுதியில் இந்த இனம் காணப்பட்டது. மருத்துவ குணம் கொண்டது எனக் கூறி இந்த ரக தவளை வேட்டையாடப்படுகிறது. 'இன்டர்நேஷனல் யூனியன் கன்சர்வேஷன் ஆப் நேச்சர்' அமைப்பு, இந்த இனத்தை அழிந்து வரும் பட்டியலில் சேர்த்துஉள்ளது. இந்த இன தவளைகளை பாதுகாக்க, மாநில தவளையாக அறிவிக்க,கேரள வனத்துறை பரிந்துரைத்து உள்ளது

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
14-ஜூன்-202109:04:20 IST Report Abuse
oce இந்த தவளையை சைனாக்காரனிடம் கொடுத்தால் அதிலும் வைரஸை கிளப்பி விடுவான்.
Rate this:
Cancel
14-ஜூன்-202108:01:13 IST Report Abuse
Ponnusamy Suppaiyan இந்த வகை தவளை.(.அவிநாசி)..எனது தோட்டத்தில்..இருப்பதை நான் பலமுறை (நீர் பாய்ச்சும் போது)..மண்வெட்டியில் மடை மாற்றும்போது...பார்த்திருக்கிறேன்..! ..ஐயய்யோ வெட்டுப்பட்டு விட்டதோ ..என்று பதைபதைத்து...பின்பு அலுங்காமல் எடுத்து...மீண்டும் மண்ணுக்குள் வைத்து மூடிவிடுவேன்..!.. ..."..இறைவனின் படைப்பில் எத்தனை அழகுகள்..!....ஆச்சரியங்கள்.."..!!... ..... 🙏....
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
14-ஜூன்-202107:10:39 IST Report Abuse
கொக்கி குமாரு உலகிலேயே எங்குமே மாட்டிக்கொள்ளாமல் விஞ்ஞான முறையில் ஆட்டையை போட்டு தன் ரத்த சொந்தங்களுக்கு சொத்து சேர்த்ததனால் திருட்டு திமுகவின் கட்டுமரம் கருணாநிதியை அரியவகை அரசியல் தலைவராக சேர்க்க ஏதேனும் நடவடிக்கை எடுக்க முடியுமா?
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
14-ஜூன்-202114:04:26 IST Report Abuse
pradeesh parthasarathyஅமித் ஷா வையும் அவரது மகனையும் கூட இந்த கூட்டணிக்குள் சேர்க்கவும் .......
Rate this:
Anbu - Kolkata,இந்தியா
14-ஜூன்-202119:37:08 IST Report Abuse
Anbu\\\\ இந்த கூட்டணிக்குள் சேர்க்கவும் //// அமித் ஷா தனது ஒவ்வொரு வாரிசையும் அரசியலுக்கு இழுத்துக்கொண்டு வந்து கட்சியினரை வாரிசுக்கு அடிமைப்படுத்தவில்லை ............ ரொம்ப அறிவு ..............
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X