கேரளாவின் அரிய வகை தவளைக்கு அங்கீகாரம் கிடைக்குமா?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கேரளாவின் அரிய வகை தவளைக்கு அங்கீகாரம் கிடைக்குமா?

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (9)
Share
திருவனந்தபுரம்- வாழ்நாள் முழுதும் பூமிக்குள் வாழும் அபூர்வ இன தவளை இனம் அழியாமல் பாதுகாக்க, அதை மாநில தவளையாக அறிவிக்க, கேரள வனத்துறை, அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.கேரளாவில் அபூர்வ இனமான, 'பர்ப்பிள் தவளை' எனப்படும், பன்றி மூக்கு தவளையை 2003ல் டில்லி பேராசிரியர் பிஜூ, முதன்முறையாக இடுக்கியில் கண்டுபிடித்தார். இது பற்றி 2017ல் வன ஆராய்ச்சியாளர் சந்தீப்தாஸ்

திருவனந்தபுரம்- வாழ்நாள் முழுதும் பூமிக்குள் வாழும் அபூர்வ இன தவளை இனம் அழியாமல் பாதுகாக்க, அதை மாநில தவளையாக அறிவிக்க, கேரள வனத்துறை, அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.



latest tamil news


கேரளாவில் அபூர்வ இனமான, 'பர்ப்பிள் தவளை' எனப்படும், பன்றி மூக்கு தவளையை 2003ல் டில்லி பேராசிரியர் பிஜூ, முதன்முறையாக இடுக்கியில் கண்டுபிடித்தார். இது பற்றி 2017ல் வன ஆராய்ச்சியாளர் சந்தீப்தாஸ் மேற்கொண்ட ஆராய்ச்சிக்கு, லண்டன் விலங்கியல் பவுண்டேஷன் விருது வழங்கியது.

வாழ்நாள் முழுதும் பூமிக்கடியில் வாழும் இத்தவளைகள், ஒவ்வொரு ஆண்டும் மழைகாலங்களில் மட்டும் வெளியில் வந்து இனப் பெருக்கம் செய்யும். சில நாட்களில் மீண்டும் பூமிக்குள் சென்று விடும். பெரிய உடம்பு, சிறிய கால்கள், சிறிய தலை, உதடுகளை உடையது. 170 கிராம் எடையும், 6 - 9 செ.மீ. நீளமும் உடையது.பூமிக்கடியில் உள்ள புழு, பூச்சிகளை தன் நீண்ட நாக்கால் கவர்ந்து உணவாக்கி கொள்ளும். 'இதன் வாழ்க்கை முறை மர்மம் நிறைந்தது, முழுமையாக தெரிந்து கொள்ள முடியவில்லை' என, ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


latest tamil news



பரிந்துரை

கேரளாவில் பெரியாறு புலிகள் சரணாலயம், தமிழகத்தில் ஆனைமலை புலிகள் சரணாலய பகுதியில் இந்த இனம் காணப்பட்டது. மருத்துவ குணம் கொண்டது எனக் கூறி இந்த ரக தவளை வேட்டையாடப்படுகிறது. 'இன்டர்நேஷனல் யூனியன் கன்சர்வேஷன் ஆப் நேச்சர்' அமைப்பு, இந்த இனத்தை அழிந்து வரும் பட்டியலில் சேர்த்துஉள்ளது. இந்த இன தவளைகளை பாதுகாக்க, மாநில தவளையாக அறிவிக்க,கேரள வனத்துறை பரிந்துரைத்து உள்ளது

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X