பொது செய்தி

இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் தேர்தல்; பேச்சு நடத்த அரசு திட்டம்

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி-ஜம்மு - காஷ்மீரில் தேர்தலை நடத்துவது தொடர்பான முயற்சிக்கு மத்திய அரசு தயாராகி இருப்பதாக தெரிகிறது. இது குறித்து அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அந்தஸ்து ரத்துஜம்மு - காஷ்மீரில், மெஹபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துஇருந்தது. கூட்டணி முறிந்ததால், 2018 ஜூனில்

புதுடில்லி-ஜம்மு - காஷ்மீரில் தேர்தலை நடத்துவது தொடர்பான முயற்சிக்கு மத்திய அரசு தயாராகி இருப்பதாக தெரிகிறது. இது குறித்து அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



latest tamil news




அந்தஸ்து ரத்து

ஜம்மு - காஷ்மீரில், மெஹபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துஇருந்தது. கூட்டணி முறிந்ததால், 2018 ஜூனில் அரசு கவிழ்ந்து, ஜனாதி பதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.இந்நிலையில், 2019 ஆக.,ல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.'ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பும்போது, மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும், சட்டசபை தேர்தல் நடத்தப்படும்' என, மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதற்கிடையே முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா தலைமையில் ஏழு எதிர்க்கட்சிகள் இணைந்து, குப்கர் என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. கூட்டணிக்குள் பிரச்னை ஏற்பட்டதால், கடந்த சில மாதங்களாக எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் இந்த கூட்டணி ஈடுபடவில்லை.இந்நிலையில், மெஹபூபா முப்தியை, பரூக் அப்துல்லா சமீபத்தில் சந்தித்து பேசினார்.ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிப்பதுடன், சட்டசபை தேர்தலை நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.


latest tamil news



அழைப்பு

அது குறித்து இவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த கூட்டத்தில், கூட்டணியின் மற்ற கட்சிகளும் பங்கேற்றன.இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும், தேர்தல் தொடர்பாக பேச்சு நடத்த அழைப்பு விடுத்தால், அதில் பங்கேற்க தயாராக இருப்பதாக, இந்த கூட்டணியில் உள்ள தலைவர்கள், தனித் தனியாக தெரிவித்துஉள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,பஹ்ரைன்
14-ஜூன்-202111:09:30 IST Report Abuse
sahayadhas வேண்டாம் வேண்டாம் ஜனங்களை கொலை செய்ய முயற்ச்சிக வேண்டாம்
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
14-ஜூன்-202109:56:57 IST Report Abuse
M  Ramachandran .. விரும்பிகள் அன்கு சென்று தேர்தலில் நிக்காலாமே? ஏன் என்றால் பக்கத்திலேயே அவர்களுக்கும் காங்கிரஸிற்கும் வேண்டப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
14-ஜூன்-202107:11:12 IST Report Abuse
ஆப்பு போங்க.. போங்க.. பறந்து பறந்து போய் அங்கேயும் பரப்புங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X