பொது செய்தி

இந்தியா

ஊரடங்கில் தளர்வுகள்: டீக்கடைகள் திறக்க அனுமதி

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை--தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் குறைந்த 27 மாவட்டங்களில், இன்று முதல் டீ கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் பல தளர்வுகளையும், முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, கடந்த மாதம் 24ம் தேதி முதல், தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இம்மாதம் 7ம் தேதியில் இருந்து மளிகை, காய்கறி, பழக்கடைகள் திறப்பு

சென்னை--தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் குறைந்த 27 மாவட்டங்களில், இன்று முதல் டீ கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் பல தளர்வுகளையும், முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.latest tamil news


தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, கடந்த மாதம் 24ம் தேதி முதல், தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இம்மாதம் 7ம் தேதியில் இருந்து மளிகை, காய்கறி, பழக்கடைகள் திறப்பு உட்பட, சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது.இன்று காலையுடன் முழு ஊரடங்கு முடிந்த நிலையில், மேலும் சில தளர்வுகளுடன், வரும் 21ம் தேதி வரை, முழு ஊரடங்கு அறிவிக்கப் பட்டுள்ளது.நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர். நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய, 11 மாவட்டங்கள் தவிர்த்து, மீதமுள்ள 27 மாவட்டங்களில், சில தளர்வுகளை முதல்வர் ஸ்டாலின், சில தினங்களுக்கு முன் அறிவித்தார். அந்த தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வர உள்ளன.

அதன் விபரம்: சலுான் கடை திறப்புஅழகு நிலையங்கள், சலுான்கள் குளிர்சாதன வசதி இல்லாமல், ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் காலை 6:00 முதல் மாலை 5:00 மணி வரை செயல்படலாம்அரசு பூங்காக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்களில், காலை 6:00 முதல், 9:00 மணி வரை நடைபயிற்சிக்காக மட்டும் அனுமதிக்கப்படும்வேளாண் உபகரணங்கள், 'பம்பு செட்' பழுது நீக்கும் கடைகள், காலை 9:00 முதல், மாலை 5:00 மணி வரை; கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், காலை 9:00 முதல் பகல் 2:00 மணி வரை செயல்படலாம்.மது கிடைக்கும்'டாஸ்மாக்' கடைகள், காலை 10:00 முதல், மாலை 5:00 மணி வரை உண்டு மிக்சி, கிரைண்டர், 'டிவி' போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் பழுது நீக்கும் கடைகள்; மொபைல் போன் மற்றும் அதை சார்ந்த பொருட்கள் விற்பனை கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள், காலை 9:00 முதல், பகல் 2:00 மணி வரை செயல்படலாம்டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதித்த அரசு, டீ கடைகள் திறக்க அனுமதிக்காதது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு, தற்போது கடைகள் திறக்க உத்தரவிட்டது குறித்து, சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.இந்நிலையில், ஏற்கனவே பல்வேறு தளர்வுகளை அறிவித்த 27 மாவட்டங்களில், மேலும் சில தளர்வுகளை, நேற்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அவை இன்று முதல் அமலுக்கு வர உள்ளன. அதன் விபரம்: டீ கடைகள் திறப்புதமிழகத்தில், நோய் பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில், இன்று முதல் டீ கடைகள், காலை 6:00 முதல், மாலை 5:00 மணி வரை, 'பார்சல்' முறையில் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது.மக்கள் பார்சல் முறையில் டீ வாங்க வரும் போது, பாத்திரங்களை கொண்டு வந்து பெற்று செல்ல வேண்டும். பிளாஸ்டிக் பைகளில், டீ பெறுவதை தவிர்க்கவும். கடைகளின் அருகே நின்று, டீ குடிக்க அனுமதி இல்லைபேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல, இனிப்பு, கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவை, காலை 8:00 முதல், மதியம் 2:00 மணி வரை இயங்கலாம். இங்கும் பார்சல் விற்பனைக்கு மட்டுமே அனுமதி


latest tamil news


இ - சேவை' மையம் பொதுமக்கள் நலன் கருதி, அரசு அலுவலகங்களில் இருந்து, சான்றிதழ்கள் மற்றும் சேவைகளை பெற, இ- - சேவை மையங்கள் இன்று முதல் இயங்கும்கட்டுமான பணிகள் மேற்கொள்ள, ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், வாங்கும் கட்டுமான பொருட்களுக்கு பணம் செலுத்துவதும் சிக்கலாக உள்ளது.இதை கருத்தில் வைத்து, கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள், 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அரசு அறிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
14-ஜூன்-202112:31:03 IST Report Abuse
RajanRajan ஊரடங்குன்னு சொல்லி ஊரையே அடக்கி ஆண்டுட்டன்.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
14-ஜூன்-202111:38:58 IST Report Abuse
g.s,rajan இனிமே ஊரடங்கு போட்டா மக்கள் எல்லாரும் விஷம் குடிச்சுதான் சாகனும் ,இல்லே இந்த அரசாங்கமே மக்களுக்கு விஷத்தைக் கொடுத்துட்டா நிம்மதியாய் போய்சேரலாம் உயிரோட இருந்து எண்ணத்த கண்டோம் உருப்படியா ஒண்ணுமேயில்லை .
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
14-ஜூன்-202109:24:39 IST Report Abuse
RajanRajan உரக்கடை பூச்சி மருந்து கடை எல்லாம் திறப்பாங்களா. ஏண் ? பாலிடால் வாங்கணும்.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-ஜூன்-202114:00:13 IST Report Abuse
தமிழவேல் போனவருஷம் பலவாரங்கள் பசியோட இருந்த நீங்கள் இந்த சிலவாரப் பசியில் செத்துடாதீங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X