பொது செய்தி

இந்தியா

5 ஆயிரம் பாகிஸ்தான் அகதிகளுக்கு ம.பி.,யில் தடுப்பூசி!

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
இந்தூர்: மத்திய பிரதேசத்தின் இந்தூரில் வசிக்கும் இந்து சிந்தி சமூகத்தைச் சேர்ந்த சுமார் 5,000 பாகிஸ்தான் அகதிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்படும் என மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.மத்திய பிரதேசத்தில் தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதியாக இந்தூர் மாவட்டம் உள்ளது. அங்கு இதுவரை 1,370 பேர் கோவிட்டால் இறந்துள்ளனர். 1.52 லட்சம் பேர் கோவிட்டால்

இந்தூர்: மத்திய பிரதேசத்தின் இந்தூரில் வசிக்கும் இந்து சிந்தி சமூகத்தைச் சேர்ந்த சுமார் 5,000 பாகிஸ்தான் அகதிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்படும் என மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.



latest tamil news


மத்திய பிரதேசத்தில் தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதியாக இந்தூர் மாவட்டம் உள்ளது. அங்கு இதுவரை 1,370 பேர் கோவிட்டால் இறந்துள்ளனர். 1.52 லட்சம் பேர் கோவிட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இந்தூர் மாவட்டத்தில் சுமார் 13.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 2.35 லட்சம் பேர் இரண்டு டோஸ்களையும் பெற்று முழு பாதுகாப்புடன் உள்ளனர்.


latest tamil news


இந்நிலையில் இந்தூர் பகுதியில் வசிக்கும் பாகிஸ்தான் அகதிகளுக்கும் தடுப்பூசி போடுமாறு அவர்களின் பிரதிநிதிகள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். மாவட்ட நோய்த்தடுப்பு அதிகாரி டாக்டர் பிரவீன் ஜாடியா, இதனை முதல்வர் அலுவலக கவனத்துக்கு கொண்டு சென்றார். முதல்வர் அலுவலகமும் ஒப்புதலளித்துவிட்டது.

தற்போது அவர்கள் தங்களின் பாஸ்போர்ட்டை காட்டி நகரிலுள்ள தடுப்பூசி மையங்களில் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளனர். சுமார் 5,000 பாகிஸ்தான் அகதிகள் இந்தூரில் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் சிந்தி காலனி பகுதியில் வசிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
14-ஜூன்-202114:52:47 IST Report Abuse
Rasheel அவர்கள் அகதிகள் அல்ல. அகண்ட இந்தியாவின் ஒரு பகுதி. மத காரணங்களுக்காக துன்புறுத்தப்பட்டு தங்கள் சொத்துக்களை இழந்து பாகிஸ்தானில் இருந்து துரத்தப்பட்டார்கள்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-ஜூன்-202113:54:07 IST Report Abuse
தமிழவேல் மற்ற நாடுகளைப்போல, வெளிநாட்டவரானாலும், உள்நாட்டவரானாலும் பிரித்துப் பார்க்காமல் ஊசிகளை போட்டாக வேண்டும். ""இல்லாவிடில் கொரோனாவை வெல்ல முடியாது"". இதே தத்துவத்திலதான் (வெல்வதற்கு), ஏழை நாடுகளுக்கும் ஊசிகள் விநியோகிக்கப்படுகின்றன.
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்மாநில வாரியாக யார் ஆட்சியென்று கரூப்பனா சிவப்பானா என்று பிரித்து பார்க்கும் நிலையில் வெளிநாட்டவராம் கருணையாம் எதிரில் வரும் எவரும் தேச துரோகியோ என்ற சந்தேக பார்வையுள்ள நாட்களில் ஏனிந்த வேதாந்தம்?...
Rate this:
Cancel
14-ஜூன்-202105:51:43 IST Report Abuse
இவன் ஹிந்துஸ் க்கு போடுங்க
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்தெருநாய்களை உணவிட வேண்டும்னு கோரிக்கை வைக்கிறாங்க இவரும் மனித இனமென்று சொல்லிக் கொள்கிறார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X