பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரி, கோவைக்கு இன்று கனமழை வாய்ப்பு

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 14, 2021
Share
Advertisement
சென்னை : நீலகிரி, கோவை மாவட்டங்களில், இன்று (ஜூன் 14) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வங்கக் கடலில் ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். தமிழகத்தில், இன்றும், நாளையும் நீலகிரி, கோவை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி,
rain, Coimbatore, Ooty

சென்னை : நீலகிரி, கோவை மாவட்டங்களில், இன்று (ஜூன் 14) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வங்கக் கடலில் ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். தமிழகத்தில், இன்றும், நாளையும் நீலகிரி, கோவை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்.


latest tamil news


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.மன்னார் வளைகுடா, தெற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளில், நாளை வரை மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். அரபிக்கடல் பகுதிகளில், 17ம் தேதி வரை மணிக்கு, 65 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X