பொது செய்தி

தமிழ்நாடு

'இ-பதிவு' இணையதளத்தில் திருமண பிரிவு சேர்க்கப்படுமா?

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை : 'திருமணங்களுக்கு செல்வதற்காக, 'இ - பதிவு' வசதியை, அதற்கான இணையதளத்தில் மீண்டும் சேர்க்க வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு முன், தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.அப்போது, மருத்துவ அவசரம், இறப்பு மற்றும் இறப்பு சார்ந்த விஷயங்களுக்கு மட்டும், இ - பதிவு அனுமதி
E pass, TN lockdown, curfew

சென்னை : 'திருமணங்களுக்கு செல்வதற்காக, 'இ - பதிவு' வசதியை, அதற்கான இணையதளத்தில் மீண்டும் சேர்க்க வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு முன், தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.அப்போது, மருத்துவ அவசரம், இறப்பு மற்றும் இறப்பு சார்ந்த விஷயங்களுக்கு மட்டும், இ - பதிவு அனுமதி வழங்கப்பட்டது.தற்போது, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை வழங்கிய பிறகும், திருமண நிகழ்வில் பங்கேற்பதற்கான, இ - பதிவு வசதி வழங்கப்படவில்லை.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: பத்திரிகையில் பெயர் இருந்தால், திருமண நிகழ்வில் பங்கேற்க, சில வாரங்களுக்கு முன் அனுமதி வழங்கப்பட்டது.அதற்கு, இ - பதிவு இணையதளத்தில், திருமணம் என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. தளர்வில்லாத ஊரடங்கின் போது, அந்த பிரிவு நீக்கப்பட்டது.தற்போது, சில தளர்வுகள் வழங்கப்பட்டு இருந்தாலும், திருமண பிரிவு வசதி வழங்கப்படவில்லை.


latest tamil newsஜூன், ஜூலையில் ஏராளமான முகூர்த்த தினங்கள் உள்ளன. இதில், நெருங்கிய சொந்தங்கள் மற்றும் உடன் பிறந்தோர் திருமணம் நடைபெற இருக்கிறது. திருமண வீட்டை சேர்ந்தவர்கள் பலர், வெளியூர்களில் உள்ளனர்.அவர்கள் திருமணத்திற்கு செல்ல, eregister.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு செய்ய, திருமண வசதி கொடுக்கப்படவில்லை.

அதனால், திருமண வீட்டாரே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, திருமணத்தில் பங்கேற்க ஏதுவாக, இ - பதிவு இணையதளத்தில்,அதற்கான வசதியை, தமிழக அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan - rajapalayam,இந்தியா
14-ஜூன்-202119:03:47 IST Report Abuse
kumaresan இ பதிவு வசதியை இணையதளத்தில் சேர்த்தால் மகன் மகள்களுக்கு குறித்த தேதியில் திருமண நடத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் மனமகிழ்ச்சி கொள்வர்.அரசு இதற்கு ஆவன செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
Gobalakrishnan s.v - Chennai,இந்தியா
14-ஜூன்-202116:01:38 IST Report Abuse
Gobalakrishnan s.v இ பதிவு வசதியை இணையதளத்தில் சேர்த்தால் மகன் மகள்களுக்கு குறித்த தேதியில் திருமண நடத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் மனமகிழ்ச்சி கொள்வர்.அரசு இதற்கு ஆவன செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
Sanghi -  ( Posted via: Dinamalar Android App )
14-ஜூன்-202113:16:23 IST Report Abuse
Sanghi E registration otp மிகவும் தாமதமாக ஆறு மணி நேரம் கழித்து வருது. என்ன நிர்வாகம் இது? EB Reading எடுக்க ஆள் வருவது இல்லை. எல்லாமே சகஜ நிலைக்கு வருது விட்டது. ஊரடங்கு பெயரளவில் தான். அப்படி இருக்கையில் Reading எடுக்க வர முடியாதா? ரொம்ப மோசமான நிர்வாகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X