பொது செய்தி

இந்தியா

ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவுகிறது- மத்திய அமைச்சர் பெருமிதம்,,!

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
டில்லி: மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெடி சமீபத்தில் ஓர் முக்கிய கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாகவும் இடதுசாரி தீவிரவாதிகள் மற்றும் சர்வதேச பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் குறைந்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் ஜம்மு

டில்லி: மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெடி சமீபத்தில் ஓர் முக்கிய கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாகவும் இடதுசாரி தீவிரவாதிகள் மற்றும் சர்வதேச பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் குறைந்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.



latest tamil news


கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பல ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு மற்ற மாநிலங்கள்போல அதுவும் சாதாரண மாநிலம் ஆகியது.

இதற்காக சட்டப்பிரிவு 370-ஐ நீக்க, அமித் ஷாவின் தீவிர முயற்சியால் ஜம்மு காஷ்மீர் இந்திய மாநிலங்களில் ஒன்றாகியது. சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் அப்போது சில அத்துமீறல்கள் நடந்தன.

ஆனால் தற்போது ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் குறைந்துள்ளதாகவும் இடதுசாரி தீவிரவாதிகளின் அச்சுறுத்தலும் குறைந்து அமைதி நிலவுவதாகவும் மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெடி தெரிவித்துள்ளார்.


latest tamil news


தற்போது ஜம்மு-காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொள்வதாகவும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பல ஆண்டு காலமாக பயங்கரவாதத் தாக்குதல், பொருளாதார வளர்ச்சியின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மாநிலம் ஜம்மு காஷ்மீர். இந்த பனிமலை பிரதேசத்தை மற்ற மாநிலங்கள்போல் வளமுள்ள பொருளாதார பிரதேசமாக மாற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜவேலு ஏழுமலை (ஜாதி மத அரசியலை எதிர்ப்போம்.) மயானத்தில் கூட அமைதி நிலவும் ...... அதிலென்ன சிறப்பு இருக்கிறது.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
14-ஜூன்-202113:04:22 IST Report Abuse
Sridhar ஏன்யா... ஏன்யா? இப்படி சொல்லி சொல்லி அவுனுகள உசுப்பேத்தி, மீண்டும் ரகள பண்ணுறதுக்கா? ஏதாவது நல்ல விஷயம் நடந்தா, கொரோனாவோ தீவிரவாதமோ கொறஞ்சாலோ, கம்முனு இருக்கணும். அதப்போயி வெளியே சொல்லி, தேசவிரோத சக்திகள புண்படுத்தி மீண்டும் செயல்பட வைக்க முயற்சி செய்யக்கூடாது.
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
14-ஜூன்-202110:38:04 IST Report Abuse
sahayadhas நேற்று முன் 4போலீஸ், 2 ராணுவ வீரர்கள் பலி என்னத்த டா நீங்க சரி செஞ்சீங்க. முஸ்லீம், மற்றும் கிறிஸ்தவ வர்களை சரி செய்வது போல் காண்பித்து ஹிந்துகளின் உழைப்பு, மற்றும் அவர்களின் ஆரேக்கியத்தையும் சுரண்டிவருகிறீர்கள். இப்ப போது புரியாது பின்பு புரியும். ஒரு Plate form ticket 5 ரூ லிருந்து 50 ரூ இதே புரியாத உங்களுக்கு எப்போதும் எதுவும் புரியாது ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X