பொது செய்தி

இந்தியா

டில்லி மருத்துவமனையில் ‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசி

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி,-டில்லி இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில், ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசி, நாளை முதல் மக்களுக்கு கிடைக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.'கோவிஷீல்டு'கொரோனா வைரசுக்கு எதிராக, உள்நாட்டில் தயாராகும் 'கோவிஷீல்டு' மற்றும் 'கோவாக்சின்' தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால், ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசிக்கு, இந்திய

புதுடில்லி,-டில்லி இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில், ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசி, நாளை முதல் மக்களுக்கு கிடைக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.



latest tamil news


'கோவிஷீல்டு'கொரோனா வைரசுக்கு எதிராக, உள்நாட்டில் தயாராகும் 'கோவிஷீல்டு' மற்றும் 'கோவாக்சின்' தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால், ரஷ்யாவின் 'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசிக்கு, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, அவசரகால அனுமதி வழங்கியது.கடந்த மாதம் இரு கட்டங்களாக ஐதராபாத் மற்றும் விசாகபட்டினத்திற்கு ஸ்புட்னிக் - வி தடுப் பூசிகள் வந்து சேர்ந்தன.


latest tamil news


மூன்றாம் கட்டமாக 30 லட்சம் 'டோஸ்' தடுப்பூசிகள், சிறப்பு விமானம் வாயிலாக, சமீபத்தில் ஐதராபாத் வந்தடைந்தது.1,145 ரூபாய்இந்த தடுப்பூசி, டில்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில், நாளை முதல் பொதுமக்களுக்கு செலுத்தப்படும் என, செய்திகள் வெளியாகி உள்ளன.கொரோனாவில் இருந்து 94.3 சதவீதம் பாதுகாப்பு அளிக்கும் திறன் கொண்ட ஸ்புட்னிக் - வி தடுப்பூசியின் விலை, ஒரு டோஸ் 1,145 ரூபாய் என, மத்திய அரசு நிர்ணயித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
14-ஜூன்-202117:57:18 IST Report Abuse
Loganathan Kuttuva Single dose
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X