இந்தியா 'ஒன்றியம்' என்றால் தி.மு.க.,வை திராவிட முன்னேற்ற 'கிளப்' எனலாமே

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (109) | |
Advertisement
சென்னை: 'இந்தியாவை ஒன்றியம் என்று அழைத்தால் தி.மு.க.வை திராவிட முன்னேற்ற கிளப் - சூதாடும் இடம் என்று அழைக்கலாமா' என இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை: 'கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார்' என்ற திருக்குறளுக்கு மு.வரதராசனார் எழுதிய உரையில் 'சூதாடு கருவியும் ஆடும் இடமும் கைத்திறமையையும் மதித்து
DMK, திமுக

சென்னை: 'இந்தியாவை ஒன்றியம் என்று அழைத்தால் தி.மு.க.வை திராவிட முன்னேற்ற கிளப் - சூதாடும் இடம் என்று அழைக்கலாமா' என இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை: 'கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார்' என்ற திருக்குறளுக்கு மு.வரதராசனார் எழுதிய உரையில் 'சூதாடு கருவியும் ஆடும் இடமும் கைத்திறமையையும் மதித்து கைவிடாதவர் எல்லாப் பொருள் உடையவராக இருந்தும் இல்லாதவர் ஆகிவிடுவார்' என குறிப்பிட்டுள்ளார். கருணாநிதி எழுதிய உரையில் 'சூதாடும் இடம் அதற்கான கருவி அதற்குரிய முயற்சி ஆகியவற்றை கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவர்' என குறிப்பிட்டுள்ளார்.


latest tamil news


'பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் 'கழக'த்துக் காலை புகின்' என்ற குறளுக்கு கருணாநிதி எழுதிய உரையில் 'சூதாடும் இடத்திலேயே ஒருவர் தன் காலத்தை கழிப்பாரேயானால் அது அவருடைய மூதாதையர் தேடி வைத்த சொத்துகளையும் நற்பண்பையும் நாசமாக்கிவிடும்' என குறிப்பிட்டுள்ளார். சாலமன் பாப்பையா தன் உரையில் 'சூதாடு களத்துக்குள் காலம் கழிக்கப் புகுந்தால் அது பழஞ்செல்வத்தையும் அழிக்கும் நல்ல குணங்களையும் கெடுக்கும்' என குறிப்பிட்டுள்ளார். எனவே இந்தியா 'ஒன்றியம்' என்றால் திராவிட முன்னேற்ற 'கழகம்' என்பதை திராவிட முன்னேற்ற 'கிளப்' சூதாடும் இடம் என்று அழைக்கலாமா. இவ்வாறு ராம ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (109)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kali - Madurai,இந்தியா
02-ஜூலை-202120:38:45 IST Report Abuse
Kali கூட்டாட்சித்தத்துவம் என்றால், ' இந்தியா, பல தேசிய இனங்களில் கூட்டமைப்பு ' என்பதே சரியான வரையறை அதாவது ஒரு மாநிலத்தில் அயல் மாநிலத்தில் தலைமை அல்லாத அரசு. Stalin தமிழரல்ல தெலுங்கர் . இந்தியா ஒர் ஒன்றியம் என்று திமுகவுக்கு முன்பே ஆவணப்படுத்திவிட்டோம் . நாங்கள் stalin அரசை தமிழர் நாட்டில் தெலுங்கர் அரசு என்று தான் பயன்படுத்துகிறோம்பயன்படுத்துவோம் பயன்படுத்திக்கொண்டேயிருப்போம் நாங்கள் சட்டதில்உள்ளதைத்தான் சொல்கிறோம்.
Rate this:
Cancel
Prakash Balakrishnan - Chennai,இந்தியா
20-ஜூன்-202118:27:19 IST Report Abuse
Prakash Balakrishnan திருக்குவளை,முத்துவேல்.கருணாநிதி குடும்ப கழகம்.
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
20-ஜூன்-202117:34:26 IST Report Abuse
Narayanan அது எப்படி நீங்கள் முட்டாள்தனமாக சொல்வைதெல்லாம் ஏற்கவேண்டும் என்ற தலைவிதியா ?? அதென்ன ஒன்றியம் ?? ஆட்சிக்கு பொய்யும் புனைசுருட்டும் பண்ணி வந்து எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்ற மமதை அழிந்துபோவீர்கள் , மத்தியஅரசு அல்லது மய்ய அரசு அத்துடன் முடிந்தது . நாட்டை பிளவுசெய்யும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டால் வேறுவழியில்லை அரசை தூக்கியெறிவதைத்தவிர
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X