மத்திய அரசை விட மாநில அரசுகள் தான் அதிக வரி போடுகின்றன. பக்குவமாக அவை தவிர்க்கிறார்களே...

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (57)
Share
Advertisement
நான் நிதியமைச்சராக இருந்தபோது, கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 105 டாலர். தற்போது பீப்பாய் 70 டாலர் தான். மூன்றில் இரண்டு பங்கு தான். அன்று பெட்ரோல் 55 ரூபாய்க்கு விற்க முடிந்தது. இன்று 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ஒரே வழி, மத்திய அரசு போடக்கூடிய வரிகளை குறைக்க வேண்டும்.- காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம்'மத்திய அரசை
மத்திய அரசை விட மாநில அரசுகள் தான் அதிக வரி போடுகின்றன. பக்குவமாக அவை தவிர்க்கிறார்களே...

நான் நிதியமைச்சராக இருந்தபோது, கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 105 டாலர். தற்போது பீப்பாய் 70 டாலர் தான். மூன்றில் இரண்டு பங்கு தான். அன்று பெட்ரோல் 55 ரூபாய்க்கு விற்க முடிந்தது. இன்று 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ஒரே வழி, மத்திய அரசு போடக்கூடிய வரிகளை குறைக்க வேண்டும்.
- காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம்


'மத்திய அரசை விட, மாநில அரசுகள் தான் அதிக வரி போடுகின்றன. பக்குவமாக அதை தவிர்க்கிறீர்களே...' என சொல்ல தோன்றும் வகையில், காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் பேச்சு.ஆழ்குழாய் கிணறு அமைத்து, சொட்டு நீர் பாசனம் மூலமாக காடுகளுக்கு தண்ணீர் விடப்படும். தமிழகத்தில் நாட்டு மரங்கள் தான் வளர்க்கப்படும். தைல மரங்கள், கருவேல மரங்களுக்கு அனுமதியில்லை.
- தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்


'வனங்களை அழிக்காமல், மரங்களை பெருக்கினாலே மழை பெய்துவிடும். சொட்டு நீர் என்பதெல்லாம், பணத்தை வீணடிக்கும் திட்டங்கள்...' எனக் கூறத் துாண்டும் வகையில், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேட்டி.கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த உண்மை தகவல்களை மத்திய, மாநில அரசுகள் முறையாக தெரிவிப்பதில்லை. தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு, வீட்டில் மரணம் அடைந்தவர்களை கணக்கில் கொள்வதில்லை.
- புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி


latest tamil news
'ஓராண்டுக்கும் மேலாக இந்த குறைபாடு உள்ளது. இதில் அரசு அக்கறை கொள்ளவில்லையே ஏன்...' எனக் கேட்க தோன்றும் வகையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி.'டாஸ்மாக்' கடை திறப்பு விவகாரத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் கூறியவற்றை பின்பற்றி நடக்க வேண்டும்.
- தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ராகவன்


'இப்போது அவர்களுக்கே தெரிந்திருக்கும். எதிர்க்கட்சியாக இருந்த போது நடத்திய போராட்டங்கள் அனைத்தும், அரசியல் காரணங்களுக்கே என்று...' என, சொல்ல தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ராகவன் அறிக்கை.தமிழர்களின் தொன்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர, கீழடி போன்ற இடங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், கடல்சார் தொல்லியலையும் கையிலெடுக்க வேண்டும். விரைவில் அரசு இதற்கு நல்ல முடிவெடுக்கும் என்று நம்பலாம்.
- தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜா


'தமிழர்களின் தொன்மை உலகம் அறிந்தது தான். அதற்கு தோண்ட வேண்டிய தேவையில்லை. பழந்தமிழர் இலக்கியங்களை படித்தாலே போதும்...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜா அறிக்கை.


Advertisement


வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
14-ஜூன்-202123:09:31 IST Report Abuse
DARMHAR அப்புச்சி, கம்முன்னு உன்னால் வாயைமூடிக்கொண்டு சும்மா இருக்க முடியாதா?ஏன் இந்த பிதற்றல் எல்லாம்?
Rate this:
Cancel
Ram Ram - கொங்கு நாடு,இந்தியா
14-ஜூன்-202120:52:12 IST Report Abuse
Ram Ram பெட்ரோல் விலையில் அன்று மானியம் இருந்தது . அதாவது அதிக கச்சா என்னை விலையை மக்கள்இடம் நேரடியாக பெறாமல் வரி செலுத்துவோரிடம் இருந்து பிடுங்கி கொடுப்பார்கள் . அது தவறான பாதை என்று மன்மோகன் சிங் வரி செலுத்துவோருக்கு நல்லது செய்தார் . சிதம்பரம் போன்றவர்கள் உண்மையை மறைத்து திரித்து கூறி மக்களை ஏமாற்றுவது அருவருப்பாக இருக்கிறது
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
14-ஜூன்-202118:52:41 IST Report Abuse
sankaseshan Ellamman ho w. Shamelessly you are twisting facts ? If you care to see internet .you will know who taxes more . Don't mislead .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X