பொது செய்தி

இந்தியா

தமிழகத்திற்கு 4,941 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன்: ரயில்வே வினியோகம்

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: தமிழகத்திற்கு 4,941 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:நாடு முழுவதும் திரவ மருத்துவ ஆக்சிஜனை, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் இந்திய ரயில்வே வினியோகித்து வருகிறது. இதுவரை, 421 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 1,734 டேங்கர்களில் 30,182 மெட்ரிக்

புதுடில்லி: தமிழகத்திற்கு 4,941 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.



latest tamil news


மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
நாடு முழுவதும் திரவ மருத்துவ ஆக்சிஜனை, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் இந்திய ரயில்வே வினியோகித்து வருகிறது. இதுவரை, 421 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 1,734 டேங்கர்களில் 30,182 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தென் மாநிலங்களுக்கு 15,000 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் வினியோகிக்கப்பட்டு உள்ளன. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு முறையே 4,941, 3,600 மற்றும் 3,700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்பட்டு உள்ளது.


latest tamil news



தற்போது 10 டேங்கர்களில் 177 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் 2 ரயில்கள் பயணம் செய்து வருகின்றன. கூடுதலாக சில ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இன்று தங்களது பயணத்தைத் துவங்க உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் யாரும் காஸ் விலை ரயில் கட்டணம் என்று எதுக்கும் காலணா செலவழிக்க வில்லை எல்லாமே "விலையில்லா" சேவை GST மட்டுமே வசூலிக்கப் பட்டதாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X