அமெரிக்காவில் 6 கோடி கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவில் கோவிட் தடுப்பூசிகள் உபரியாகித் தேங்குவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவால் 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவின் மக்கள் தொகையில் பாதிக்கும் குறைவானவர்களுக்கே இதுவரை கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இருந்தாலும், டென்னஸீ, வடக்கு கரோலினா போன்ற

வாஷிங்டன்: அமெரிக்காவில் கோவிட் தடுப்பூசிகள் உபரியாகித் தேங்குவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவால் 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



latest tamil news



அமெரிக்காவின் மக்கள் தொகையில் பாதிக்கும் குறைவானவர்களுக்கே இதுவரை கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இருந்தாலும், டென்னஸீ, வடக்கு கரோலினா போன்ற மாகாணங்களில் தடுப்பூசிகளுக்கான தேவை வெகுவாகக் குறைந்து, தினமும் லட்சக்கணக்கான தடுப்பூசிகள் மத்திய அரசிடம் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.ஒக்லஹோமா மாகாணத்துக்கு வாரந்தோறும் 2 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டும், அந்த மாகாணம் ஒரு மாதத்துக்கும் மேலாக புதிதாக கோவிட் தடுப்பூசிகளை வாங்கவே இல்லை. இதனால், அமெரிக்க அரசிடம் தடுப்பூசிகள் லட்சக் கணக்கில் உபரியாவது நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்து வருகிறது.


latest tamil news



இதனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் முன்வர வேண்டும் என, பல்வேறு விளம்பரங்களையும் சலுகைகளையும் அரசு அறிவித்து வருகிறது. இருந்தும் அங்கு தடுப்பூசி உபரியாவதைத் தடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால், ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரித்த 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் இம்மாத இறுதிக்குள் காலாவதியாகும் அபாயம் நிலவி வருவதாக நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan rajagopalan - Chennai,இந்தியா
14-ஜூன்-202119:30:02 IST Report Abuse
Kannan rajagopalan ஐயோ இந்த மருந்தை இந்தியா வுக்கு தள்ளி விட்டுட போறாங்கோ . நல்ல வேளை காங்கி ஆட்சியில் இல்லை.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
14-ஜூன்-202119:00:02 IST Report Abuse
Vena Suna திமுகா எதிர் கட்சின்னா தடுப்பூசி ஏன் என்று கேட்பார்கள் இங்கே. ஆளும் கட்சின்னா முதல்ல எல்லோரும் போடணும்பாங்க..
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
14-ஜூன்-202118:33:21 IST Report Abuse
Raj இனிமேல் இந்தியாவிலும் அதிகம் தடுப்பூசி போடமாட்டார்கள் என்று தெரிந்து தான் வரும் 21 ம் தேதிக்கு பிறகு தடுப்பூசி இலவசம் என்று அறிவித்து இருக்கிறோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X