அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா மரண எண்ணிக்கையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்

Added : ஜூன் 14, 2021
Share
Advertisement
\மதுரை : தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளாக நடந்த கொரோனா மரணங்களின் உண்மையான எண்ணிக்கையை மாநில அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.அவர் கூறியுள்ளதாவது: கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த உண்மை தகவல்களை மத்திய, மாநில அரசுகள் முறையாக தெரிவிப்பதில்லை என்ற கருத்து நிலவுகிறது. பீகாரில் கொரோனா மரண எண்ணிக்கை

\

மதுரை : தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளாக நடந்த கொரோனா மரணங்களின் உண்மையான எண்ணிக்கையை மாநில அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த உண்மை தகவல்களை மத்திய, மாநில அரசுகள் முறையாக தெரிவிப்பதில்லை என்ற கருத்து நிலவுகிறது. பீகாரில் கொரோனா மரண எண்ணிக்கை திட்டமிட்டு மறைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றுஏற்பட்டு வீட்டில் மரணம் அடைந்தவர்களை கணக்கில் கொள்வதில்லை. இதனால் இறப்பு சான்றிதழ் பெறுவதில் ஏழைகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

கொரோனா பாசிடிவ் தெரிந்த நாள் முதல் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று மரணம் எய்தினால் மட்டுமே இறப்பு சான்று வழங்கப்படுகிறது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சில நாட்களில் கரும்பூஞ்சை, மாரடைப்பு, மூளை ரத்தக்கசிவு போன்ற தொடர் பாதிப்புகளாலும் மரணமடைகின்றனர்.சிகிச்சைக்கு பிறகு இறப்புக்கான காரணம் என்ன என கண்டறிய பிரேத பரிசோதனை நடத்த தொடர்ந்து வலியுறுத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X