ரஷ்யாவில் ஒரே வாரத்தில் 47% உயர்ந்தது கோவிட் பாதிப்பு: மாஸ்கோவில் தளர்வுகளற்ற ஊரடங்கு!

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
மாஸ்கோ: ரஷ்யாவில் புதிதாக கோவிட் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை, கடந்த ஒரு வாரத்தில் 47 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு கோவிட் தடுப்புக் குழு தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் கோவிட் தடுப்புக் குழு தெரிவித்துள்ளதாவது:கடந்த 12ம் தேதி மட்டும் 13,510 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த 6ம் தேதி பதிவு செய்யப்பட்ட 9,163 பாதிப்பைவிட மிகவும்

மாஸ்கோ: ரஷ்யாவில் புதிதாக கோவிட் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை, கடந்த ஒரு வாரத்தில் 47 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு கோவிட் தடுப்புக் குழு தெரிவித்துள்ளது.latest tamil newsரஷ்யாவின் கோவிட் தடுப்புக் குழு தெரிவித்துள்ளதாவது:
கடந்த 12ம் தேதி மட்டும் 13,510 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த 6ம் தேதி பதிவு செய்யப்பட்ட 9,163 பாதிப்பைவிட மிகவும் அதிகமாகும். புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 50 சதவீதத்தினர் மாஸ்கோவைச் சேர்ந்தவர்கள். அந்த நகரில் கடந்த 12ம் தேதி மட்டும் 6,701 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரு வாரத்துக்கு முன் அங்கு தினசரி தொற்று 2,936 ஆக மட்டுமே இருந்தது.


latest tamil newsமாஸ்கோவில் கோவிட் பரவல் வேகமெடுத்து வருவதைத் தொடர்ந்து, அங்கு பொது இடங்களுக்கு வரும் பொதுமக்கள் முகக் கவசமும் கையுறையும் அணிந்து வர வேண்டிய விதிமுறையை அதிகாரிகள் கடுமையாக செயல்படுத்தத் தொடங்கி உள்ளனர். மேலும் அங்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மாஸ்கோவில் தடுப்பூசித் திட்டத்தையும் தீவிரப்படுத்த உள்ளோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜூன்-202121:39:11 IST Report Abuse
ஆப்பு என்னா தடுப்பூசி போட்டாலும் முககவசம் உயிர்க்கவசம்... அதைப் போடுங்க முதலில்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
14-ஜூன்-202119:09:11 IST Report Abuse
vbs manian உலகம் முழுதும் பொருளாதார நெருக்கடி ,தொழில் வளர்ச்சி முடக்கம், கோடிக்கணக்கான சாவுகள் பெரும் வேலை இழப்பு இவைகளுக்கெல்லாம் காரண கர்த்தாவான சீனாவை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரித்து எல்லா நாடுகளுக்கும் நஷ்ட ஈடு கொடுக்க சொல்ல வேண்டும். பொருளாதார தடை விதித்து தண்டிக்க வேண்டும்.
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
14-ஜூன்-202114:19:25 IST Report Abuse
pradeesh parthasarathy அப்போ ஸ்புட்னிக் vaccine எடுத்து பலன் இல்லையா ..?
Rate this:
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
14-ஜூன்-202121:33:45 IST Report Abuse
மதுரை விருமாண்டிஊசியெல்லாம் ஏற்றுமதி பண்ணிட்டாங்க.. இங்கே நடக்குற கூத்து தான் எல்லா சர்வாதிகார நாட்டிலேயும்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X