நெதன்யாகுவின் ஆட்சி முடிந்தது: இஸ்ரேல் பிரதமராக பென்னட் பொறுப்பேற்பு

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (11) | |
Advertisement
ஜெருசலேம்: இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவி ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.மேற்காசியாவை சேர்ந்த இஸ்ரேலில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் நான்கு முறை பொதுத் தேர்தல் நடந்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் நெதன்யாகுவின் லிக்யுட் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது.எனினும் பெரும்பான்மை பலம் இல்லாததால்
Israel, NaftaliBennett, PM, இஸ்ரேல், பிரதமர், பென்னட், நெதன்யாகு

ஜெருசலேம்: இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவி ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

மேற்காசியாவை சேர்ந்த இஸ்ரேலில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் நான்கு முறை பொதுத் தேர்தல் நடந்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் நெதன்யாகுவின் லிக்யுட் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது.எனினும் பெரும்பான்மை பலம் இல்லாததால் நீடிக்க முடியவில்லை. அதனால் காபந்து பிரதமராக நெதன்யாகு நீடித்து வந்தார். கடந்த மார்ச் 23-ம் தேதி நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின் நெதன்யாகு கட்சி 54 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறி நிலைமை நீடித்தது.


latest tamil newsஅங்கு 8 எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கூட்டணி அமைத்தன. அரபு கட்சி தலைமையில் இந்த 8 கட்சிகளும் கூட்டாக இணைந்து நெதன்யாகுவின் ஆட்சிக்குத் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளன. இந்தக் கூட்டணிக் கட்சிகள் சுழற்சி முறையில் பிரதமர் பதவியைப் பகிர்ந்துகொள்ள உள்ளன.
இதன்படி வலதுசாரி கட்சியான யாமினா கட்சியின் தலைவர் நப்தாலி பென்னட் பிரதமராகப் பதவி ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. இஸ்ரேல் பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் யமினா கட்சி தலைவர் பென்னட் வெற்றிப்பெற்றதை அடுத்து, புதிய பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.


பிரதமர் மோடி நன்றி !


இஸ்ரேல் பிரதமர் நேதன்யாவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இவரது ஆட்சி காலத்தில் இந்திய இஸ்ரேல் நாட்டு உறவு மேம்பட்டதாகவும், அவர் இந்தியாவுக்கு மிக துணையாக இருந்தார் என்றும் மோடி பாராட்டி உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUBBU - MADURAI,இந்தியா
14-ஜூன்-202121:21:24 IST Report Abuse
SUBBU போர் நிறுத்தத்தை மீறி ஹமாஸ் ஒரு தோட்டாவை செலுத்தினாலும், அது அவர்களுக்கான முடிவை அவர்களே தேடிக்கொண்டதற்கு சமம் இஸ்ரேலின் புதிய பிரதமர் அறிவிப்பு:அவர்கள் என்ன இந்தியர்களா? சொந்த நாட்டுக்கு துரோகமிழைப்பதற்கு?
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
14-ஜூன்-202119:24:03 IST Report Abuse
sankaseshan Musical chair PM can't bring stability . This government will not lost long . Keeping Arab parties in collision is dangerous .
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-ஜூன்-202118:48:16 IST Report Abuse
J.V. Iyer பொறுத்திருந்து பாப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X