38 மனைவி, 89 பிள்ளை, உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் காலமானார்

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (15) | |
Advertisement
ஐஸ்வால்: உலகின் மிகப் பெரிய குடும்பத்தின் தலைவர் என நம்பப்படும், இந்தியாவின் மிசோராம் மாநிலத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர் காலமானார். மிசோராம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சியோனா சானா, 76. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தவர், நேற்று உயிரிழந்தார். இவருக்கு 38 மனைவிகள், 89 பிள்ளைகள், 36 பேரப்பிள்ளைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், 'சானாவின் குடும்ப

ஐஸ்வால்: உலகின் மிகப் பெரிய குடும்பத்தின் தலைவர் என நம்பப்படும், இந்தியாவின் மிசோராம் மாநிலத்தைச் சேர்ந்த 76 வயது முதியவர் காலமானார்.latest tamil newsமிசோராம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சியோனா சானா, 76. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தவர், நேற்று உயிரிழந்தார். இவருக்கு 38 மனைவிகள், 89 பிள்ளைகள், 36 பேரப்பிள்ளைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், 'சானாவின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைச் சரியாகக் கணிப்பது கடினம்' என, அம்மாநில செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். சானாவின் மரணத்திற்கு, மிசோராம் மாநில முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.உலகின் மிகப் பெரிய குடும்பத்தின் தலைவர் என நம்பப்படும் சானாவின் வியக்கத்தக்க வாழ்க்கை, பலரையும் ஈர்த்துள்ளது. அவரின் குடும்பத்தினர், 100 அறைகள் கொண்ட, 4 மாடி வீட்டில் ஒன்றாக வசிக்கின்றனர். அந்த வீட்டைக் காண, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மிசோரம் வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் செலுத்துவதாகக் கூறப்படுகிறது.


latest tamil newsசானாவின் குடும்பத்தினர், சானா பாவ்ல் (Chana Pawl) என்ற கிறிஸ்துவப் பிரிவைச் சேர்ந்தவர்கள். அந்தப் பிரிவைச் சேர்ந்த ஆண்கள், பல பெண்களைத் திருமணம் செய்துகொள்ள அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இலங்கை
14-ஜூன்-202123:24:29 IST Report Abuse
jagan இதி என்ன பிரமாதம், DNA பரிசோதனை செய்தால் தெரியும் எத்தினி பாஸ்டர்கள் நிஜ Father பாஸ்டர்கள் என்று. பாவம் வெளிநாட்டு வாழ் மந்தைகள்.
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
14-ஜூன்-202121:32:47 IST Report Abuse
மதுரை விருமாண்டி அமெரிக்காவில் முக்கியமாக ஊட்டா (UTAH) மாநிலத்தில் Later day Saints - Mormons (மோர்மன்ஸ்) எனப்படும் பிரிவினர் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை மணம் முடித்து வாழும் முறையை வழக்கமான கொண்டிருந்தவர்கள். பல மணம் (polygamy) சட்டவிரோதம் என்பதால் அது இப்போது முற்றிலுமாக நடைமுறையில் இல்லை. இந்தியாவில் முதலில் சட்ட ஓட்டையை வரையறை செய்து விட்டு சட்டத்தை அதை சுற்றி வரைவார்கள்.. முதல் மனைவி சம்மதம் கொடுத்தால் இரண்டாவது மனம் தடையில்லை என்று இல்லாத ஒன்றை ஓட்டையாக வைத்து இரண்டாவது திருமணம் சட்டவிரோதம்ன்னு ஒரு உளுத்துப் போன சட்டம்..
Rate this:
SKANDH - Chennai,இந்தியா
18-ஜூன்-202112:42:10 IST Report Abuse
SKANDH நமது முன்னாள் தலைவனின் குடும்பம் இதைவிட பெரிய தாக்கும்....
Rate this:
Cancel
sankar - chennai,இந்தியா
14-ஜூன்-202119:41:00 IST Report Abuse
sankar ஸ்சே இன்னும் இருந்து ரெண்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு பத்து வருஷம் கூட இருந்திருக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X