பொதுநலன் கருதி கோவிட் கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொதுநலன் கருதி கோவிட் கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (10)
Share
சென்னை: கோவிட் 2ம் அலை தணிந்து வரும் நிலையில், பொது நலனை கருதி கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கோவிட் 2ம் அலை பரவலை தடுக்க அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் பரிசோதனைக்கு உள்ளாக்க கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை
ChennaiHC, Covid, Relaxation, சென்னை, உயர்நீதிமன்றம், கொரோனா, கோவிட், கட்டுப்பாடுகள்

சென்னை: கோவிட் 2ம் அலை தணிந்து வரும் நிலையில், பொது நலனை கருதி கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவிட் 2ம் அலை பரவலை தடுக்க அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் பரிசோதனைக்கு உள்ளாக்க கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.


latest tamil news


அப்போது மத்திய அரசு தரப்பில், ‛கோவிட் 2ம் அலை பரவல் தடுப்புக்கான புதிய விதிமுறைகள் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடப்பட்டு உள்ளது. குறிப்பாக சீனா மற்றும் பிரிட்டன் மட்டுமல்லாமல், தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளையும் சோதனைக்கு உள்ளாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்,' எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஏற்கனவே விமான பயணத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், 2ம் அலை தணிந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, கோவிட் தொற்று பரவல் தணியும் வரை அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், பொது நலனை கருதி கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என அறிவுறுத்தி, இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X