பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிடமாற்றம்

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மாவட்ட கலெக்டர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டவர்களுக்கு புதிய பணியிடங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி,* திண்டுக்கல் கலெக்டராக இருந்த விஜயலெட்சுமி, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை இணை செயலாளராக நியமனம்.* செங்கல்பட்டு கலெக்டராக இருந்த ஜான் லூயிஸ் உள்துறை இணை செயலராக
Tamilnadu, IAS, Transferred, TN, தமிழகம், தமிழக அரசு, ஐஏஎஸ், அதிகாரிகள், மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 39 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டவர்களுக்கு புதிய பணியிடங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி,

* திண்டுக்கல் கலெக்டராக இருந்த விஜயலெட்சுமி, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை இணை செயலாளராக நியமனம்.
* செங்கல்பட்டு கலெக்டராக இருந்த ஜான் லூயிஸ் உள்துறை இணை செயலராக நியமனம்.
* நாமக்கல் கலெக்டராக இருந்த மேக்ராஜ், நகராட்சி நிர்வாக இணை இயக்குனராக நியமனம்.
* திருப்பூர் கலெக்டராக இருந்த விஜயகார்த்திகேயன், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக நியமனம்.
* திருவாரூர் கலெக்டராக இருந்த சாந்தா, நில நிர்வாக கூடுதல் ஆணையராக நியமனம்.
* கரூர் கலெக்டராக இருந்த பிரசாந்த் மு.வடநேரே, நிதித்துறை கூடுதல் செயலாளராக நியமனம்.


latest tamil news


* மீன்வளத்துறை ஆணையராக கருணாகரன் நியமனம்.
* நில சீர்த்திருத்தத்துறை இயக்குனராக ஜெயந்தி நியமனம்.
* வணிக வரித்துறை இணை ஆணையராக கற்பகம் நியமனம்.
* போக்குவரத்து துறை ஆணையராக சந்தோஷ் கே.மிஸ்ரா நியமனம்
* தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக சுந்தரவள்ளி நியமனம்.
* பத்திரப் பதிவுத்துறை ஐஜியாக இருந்த ஷங்கர், தமிழ்நாடு காதி, கிராம தொழில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமனம்.
* விவசாயிகள் நலத்துறை சிறப்புச் செயலாளராக ஆபிரகாம் நியமனம்.
- என மொத்தம் 39 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பணியிடங்களை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravi - chennai,இந்தியா
15-ஜூன்-202107:35:07 IST Report Abuse
ravi கலெக்டர்களை அடிக்கடி மாற்றும் அரசு லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கண்டறிந்து ஏன் வீட்டுக்கு அனுப்ப முயல்வதில்லை.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-ஜூன்-202105:05:15 IST Report Abuse
Mani . V இது என்னய்யா? ஏதோ டெய்லி கோட்டா மாதிரி, இதே பொழப்பா போச்சு. ஒட்டு மொத்தமாக மாற்றி தொலைய வேண்டியதுதானே?
Rate this:
Cancel
15-ஜூன்-202104:16:15 IST Report Abuse
ஆப்பு இது மாதிரி சரியா வேலை செய்த அதிகாரிங்களை வீட்டுக்கு அனுப்பிடலாமே... புது எடத்துல போய் என்னத்தை செய்யப் போறாங்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X