பொது செய்தி

இந்தியா

சில நொடிகளில் காரை விழுங்கிய திடீர் பள்ளம்!

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
மும்பை: நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாநிலங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. மஹாராஷ்டிர மாநிலத்தில் கடந்த வாரம் முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மும்பை உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. மும்பையில் கடந்த வாரம் பெய்த மழையால், தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்து சாலை மற்றும் ரயில்

மும்பை: நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாநிலங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.



latest tamil news



மஹாராஷ்டிர மாநிலத்தில் கடந்த வாரம் முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மும்பை உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. மும்பையில் கடந்த வாரம் பெய்த மழையால், தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்து சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.




latest tamil news



இந்த நிலையில், மும்பையின் காட்கோபர் பகுதியில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, அங்கே திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தால், சில நிமிடங்களிலேயே தண்ணீருக்குள் மூழ்கி மறைந்துவிட்டது. இதை அங்கிருந்த ஒருவர் விடியோ எடுத்தார். அதில், திடீரென தோன்றியது சிறு பள்ளமாகத் தோன்றினாலும், ஒரு காரே முற்றிலும் மறைந்து போனது இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. பள்ளத்திற்குள் இருந்த மழைநீரில் மூழ்கிய கார், கிரேன் உதவியுடன் பல மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lawarance las - Dammam,சவுதி அரேபியா
14-ஜூன்-202121:37:09 IST Report Abuse
Lawarance las அந்த இடத்தைப்பார்த்தால் முன்பு அந்த இடத்தில் கிணறு இருந்ததுபோல் தெரிகிறது ,அந்த குழியில் சுற்றிப்பாருங்கள் சிமென்ட் உறை இறக்கியதுபோல் இருக்கு
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
14-ஜூன்-202119:42:58 IST Report Abuse
Ramesh Sargam கழிவு நீர் வாய்க்காலை மறைத்து போடப்பட்ட இடத்தில், அந்த கார் நிறுத்தப்பட்டிருக்கிறது. பெய்த அதிகமழையால், காரின் பாரத்தால், மண் உள்வாங்கி கார் 'முழுங்க' பட்டது.
Rate this:
Cancel
Venkat -  ( Posted via: Dinamalar Android App )
14-ஜூன்-202118:41:44 IST Report Abuse
Venkat digital India
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X